சென்னை: 'விக்ரம் வேதா' படத்தினைப் பொறுத்த அளவில் நடந்தவை எல்லாம் நன்மைக்கே என்று கருதுகிறேன் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், இரட்டைஇயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் 'விக்ரம் வேதா'.
புகழ்பெற்ற விக்ரமாதித்தன் - வேதாளம் கதையினை அடிப்படையாக கொண்டு, ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ரவுடி இடையே நடக்கும் மோதல் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் 'விக்ரம் வேதா'.
மத்திய அரசு கொண்டு வந்த 28% ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் தமிழக அரசின் 30% கேளிக்கை வரி ஆகியவற்றின் காரணமாக திரைத்துறை கொஞ்சம் தள்ளாட்டத்தில் இருந்த பொழுது கடந்த மாதம் 21-ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. நல்ல வரவேற்பினை பெற்ற இந்தப்படமானது ரூ..50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது இந்தப்படம் தொடர்பாக செய்தி நிறுவனமொன்றுக்கு நடிகர் மாதவன் அளித்த பேட்டி விபரம் வருமாறு:
முன்னதாகவே இந்தப் படத்தினை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் வரிவிதிப்பு முறைக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் நடத்திய காரணத்தினால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.ஆனால் எல்லாம் நல்லதிற்குத்தான்.. ஜூலை 21-ஆம் தேதி வெளியான இந்தப்படமானது இறைவன் அருளால் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. எனவே எது நடந்தாலும் அது நல்லதிற்காவே நடப்பதாக நினைக்கிறேன்.
இவ்வாறு மாதவன் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


