குருதிப் பெருமை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களிடம் காஜல் அகர்வால் எழுப்பும் காட்டமான கேள்வி!

திருமணம் நிச்சயிக்கப் பட்ட ஒரு பெண்ணும், ஆணும் திடீரென எந்த முன் திட்டமிடலும் இன்றி டேட்டிங் செல்கின்றனர். அந்த டேட்டிங்கில் ஆண் தனது மேன்மை மிக்க பரம்பரைக் குருதியின் உயர்தனிச் செம்மையைப் பற்றி
குருதிப் பெருமை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களிடம் காஜல் அகர்வால் எழுப்பும் காட்டமான கேள்வி!
Published on
Updated on
1 min read

டோலிவுட் நடிகர்களிடையே தற்போது ரியாலிட்டி ஷோக்கள், குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடிக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதற்கான முன்னோடிகளாக ராணா டகுபதியின் டாக் ஷோவும் ஜூனியர் என்டிஆரின் பிக்பாஸும் இருப்பதால் அந்த நிகழ்ச்சிகள் அடைந்த வெற்றியைக் கண்டு தற்போது காஜல் அகர்வாலும் முதல் முறையாக குறும்படத்தில் நடிக்கத் துவங்கி இருக்கிறார். இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் சகோதரரான குஷ் சின்ஹா இயக்கியுள்ள ‘ஹூன் மெய்ன் ஹை’ எனும் குறும்படத்தில் காஜல், பாலிவுட் நடிகரான ஆயூஷ்மான் குரானாவின் சகோதரர் அபர்ஷக்தி குரானாவுடன் இணைந்து நடித்துள்ளார். 

திருமணம் நிச்சயிக்கப் பட்ட ஒரு பெண்ணும், ஆணும் திடீரென எந்த முன் திட்டமிடலும் இன்றி டேட்டிங் செல்கின்றனர். அந்த டேட்டிங்கில் ஆண் தனது மேன்மை மிக்க பரம்பரைக் குருதியின் உயர்தனிச் செம்மையைப் பற்றி சமயம் கிடைக்கும் போதெல்லாம் பெருமை பொங்கப் பேசிபேசி பெண்ணை எப்படியெல்லாம் எரிச்சலுக்குள்ளாக்குகிறான் என்பது தான் குறும்படத்தின் கதை. இன்றைய நவீன யுக இளைஞர்களிடையே திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணோ, பெண்ணோ இருவரில் ஒருவர் சதா தங்களது குடும்பப் பெருமையை, குருதித் தூய்மையைப் பற்றி பெருமை பேசுக் கொண்டிருந்தால் அது கூட உறவில் பிளவு ஏற்படக் காரணமாகி விடுகிறது என்பது நிஜம். இவ்விதமாக இன்றைய இளைஞர்களிடையே திருமணத் தடைகளை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான பிரச்னைகளில் ஒன்றைப் பற்றி விவாதிக்கும் குறும்படம் என்ற வகையில் இது மிக முக்கியமான குறும்படம் தான். 

சதா தனது குருதியைப் பற்றி வீண் ஜம்பமடித்துக் கொண்டிருக்கும் அந்த ஆணிடம் கடைசியில் காஜல் ஒரே ஒரு கேள்வி தான் கேட்கிறார்.

“இத்தனை பெருமையான உனது குருதியை நீ எப்போதாவது, யாருக்காவது தானமளித்திருக்கிறாயா?” என;

சரியான கேள்வி தான். இல்லையா?!

முதன் முதலாக இப்படி ஒரு அருமையான குறும்படத்தில் நடித்ததற்காக காஜலை வாழ்த்தலாம் வாங்க!

Image courtesy: you tube, google

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com