என் மகனைக் காப்பாற்றுங்கள்: நடிகர் திலீப்பின் தாய் கேரள முதல்வருக்குக் கடிதம்!
நடிகர் திலீப்பைக் காப்பாற்றக் கோரி அவரது தாய் சரோஜம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்...


நடிகர் திலீப்பைக் காப்பாற்றக் கோரி அவரது தாய் சரோஜம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த கேரள நடிகை, காரில் கடத்திச் செல்லப்பட்டு 2 மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவரது 2ஆவது மனைவியும், நடிகையுமான காவ்யாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நடிகர் திலீப்பை காப்பாற்றக் கோரி அவரது தாய் சரோஜம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மகன் அப்பாவி. அவர் வசமாக இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார். எனவே அவரைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...