
‘துவ்வடா ஜகன்நாதம்’ திரைப்படத்துக்குப் பின் அல்லு அர்ஜூன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படத்தின் பெயர் ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’ இதன் தமிழாக்கம் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’ என்பதே! இந்த திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கவிருக்கும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து டோலிவுட்டைக் கலக்கப் போவது யாரெல்லாம் தெரியுமா? நமது ’‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூனும், ‘நாட்டாமை’ சரத்குமாரும் தான்.
அர்ஜூனும், சரத் குமாரும் ஃபிட்னஸுக்கு பெயர் போன தென்னிந்திய ஹீரோக்கள். இவர்களுடன் இணைந்து நடிக்கும் போது இன்னும் ஸ்பெஷலாக ஃபிட்னஸில் கவனம் செலுத்தினால் நல்லது என்றோ என்னவோ?! அல்லு அர்ஜூன் அமெரிக்க ஃபிட்னஸ் குரு ஒருவர் மூலமாக 6 பேக் வைக்கப் பக்காவாக முயற்சித்து வருகிறாராம்.
இந்தப் படத்துக்கான ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ஸ்டண்ட் கொரியோகிராபிக்குப் பெயர் போன ராம் லக்ஷ்மண் மாஸ்டர்களின் மேற்பார்வையில் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகின்றனவாம்.
படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜிவ் ரவி.
தயாரிப்பாளர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகாபாபு.
தற்போது படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இத்திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 27- ல் வெளிவரலாம் எனப் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருமணத்துக்கு தயாராகிவிட்டார்களா அஞ்சலி - ஜெய் ஜோடி?
சிரஞ்சீவி நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் மூலம் டோலிவுட்டில் களமிறங்கும் விஜய் சேதுபதி!
ஃபோட்டோ ஷூட் என்றால் அவருக்கு லட்டு மாதிரி; ஆனால் இவருக்கு ரொம்பத் தயக்கம்! யார் அந்த அவர், இவர்?!
பொது இடத்தில் தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்ற ரசிகருக்குப் ‘பளார்’ விட்ட பாலகிருஷ்ணா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.