இணையத்தில் ஐஸ்வர்யா ராயைக் குறி வைத்து சுற்றிச் சுழலும் புரளிகள்!

பலமுறை புரளிகளில் சிக்கி அவதிப் பட்டோர் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராய் தான்.
இணையத்தில் ஐஸ்வர்யா ராயைக் குறி வைத்து சுற்றிச் சுழலும் புரளிகள்!
Published on
Updated on
2 min read

உலக அழகி என்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு இப்போதும் அது ஐஸ்வர்யா ராய் மட்டுமே!. அப்படி இருக்க... சமீபத்தில் ஐஸ்வர்யா ராய், திருப்பதி வெங்கடேஷப் பெருமாளுக்கு முடி காணிக்கை அளித்து விட்டு மொட்டைத்தலையுடன் நிற்பதாக இணையத்தில் ஒரு பொய்யான புகைப்படம் உலா வந்து கொண்டிருக்கிறது.

முதலில் அது ஐஸ்வர்யாவின் நிஜத் தோற்றம் தான் என்று நம்பி பல ரசிகர்கள் ஏமாந்தார்கள். எனினும் இறுதியில் அது இணையத்தில் புரளி கிளப்புவோர் வேண்டுமென்றே செய்த சதி என்று தெரிய வந்தது.

இது மார்பிங் செய்யப்படுவதற்கு முந்தைய ஒரிஜினல் புகைப்படம்...

இப்படித்தான், ஐஸ்வர்யாவின் புகைப்படமொன்று, இணைய விஷமிகளால் மார்பிங் செய்யப்பட்டு அவர் மொட்டை அடித்துக் கொண்டதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி இணையத்தில் வைரலானது. பாலிவுட் பிரபலங்கள் பலரைப் பற்றியும் இப்படி விதம் விதமாக வதந்திகளும், புரளிகளும் கிளப்பப் படுவது சகஜம் தான் என்றாலும், இப்படிப் பலமுறை புரளிகளில் சிக்கி அவதிப் பட்டோர் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராய் தான்.

ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பாகிஸ்தானி இணையதளம் ஒன்றில், உலக அழகி  ஐஸ்வர்யா ராய் தற்கொலை செய்து கொண்டார் என்று பகீர் செய்தி வெளியாகி ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை எல்லாம் பீதியில் ஆழ்த்தியது. தற்கொலைக்கான காரணமாக அவர்கள் குறிப்பிட்டிருந்த விஷயம்; ‘ஏ தில் ஹாஇ முஸ்கில்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா, ரந்தீர் கபூருடன் வெகு தாராளமாக நடித்ததை அமிதாப் குடும்பம் கண்டித்ததால், அவர்களது டார்ச்சர்களைப் பொறுக்க முடியாமல் ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயற்சித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் மருத்துவரிடம் ‘தயவு செய்து என்னைச் சாக அனுமதியுங்கள்’ என ஐஸ்வர்யா ராய் கெஞ்சியதாகக் கூட செய்தி வெளியானது. 

ஆனால் இவையெல்லாமும் வதந்திகளே எனப் பின்னர் நிரூபணம் ஆயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com