சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம்: புதிய தகவல்!
சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் - தானா சேர்ந்த கூட்டம்...


சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கலன்று வெளியாகும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் விக்னேஷ் சிவன் நிறைவு செய்துள்ளார். சென்னையில் படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இத்தகவலை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் தெரிவித்தார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...