திவ்யதர்ஷினி (டிடி) விவாகரத்துப் பெற இதுதான் காரணமா?

'நம்ம வீட்டு கல்யாணம்', 'காஃபி வித் டிடி' போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரபல தனியார்
திவ்யதர்ஷினி (டிடி) விவாகரத்துப் பெற இதுதான் காரணமா?
Published on
Updated on
1 min read

'நம்ம வீட்டு கல்யாணம்', 'காஃபி வித் டிடி' போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி. இவரை டிடி என்றே செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். சமீபத்தில் தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார் என்ற தகவல் வெளியானது. டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் 2014-ம் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

டிடி தனது கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ததற்கான காரணம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான். டிடி திரைப்படங்களில் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இது அவரின் கணவரின் குடும்பத்தினருக்கு விருப்பமில்லை. டிடியிடம் இது குறித்து வெளிப்படையாகப் பேசினார்கள். மேலும், சுச்சி லீக்ஸில் இவர் தொடர்பான புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அவரது குடும்பத்தில் இதுவும் ஒரு பிரச்னையாகியது. அதன் பின்னர் டிடியும் அவர் கணவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் டிடி இது குறித்து பேச மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெற விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. Mutual Divorce முறையில் விவாகரத்து பெற ஆறு மாதம் கால அவகாசம் நீதிமன்றத்தால் அளிக்கப்படும். அதன் பிறகும் விவாகரத்து பெறும் முடிவில் தம்பதியர் உறுதியாக இருந்தால் உடனடியாக விவாகரத்து வழங்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com