தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலிலும் வாக்காளர்களுக்குப் பணம், தங்கக்காசு தருகிறார்கள்: எஸ்.வி. சேகர் சாடல்!

ஆர்.கே. நகர் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று பேச நமக்கெல்லாம் தகுதியே இல்லை...

News image
Updated On :23 டிசம்பர் 2017, 10:22 am

எழில்

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலிலும் வாக்காளர்களுக்குப் பணமும் தங்கக்காசும் தருகிறார்கள் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நாளை நடைபெறுகிறது. 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து விலகினார். விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் அவர் போட்டியிட முடிவெடுத்ததால் தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியிலிருந்து விலகினார். இவர் விஷாலின் ஆதரவுடன் விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தற்போது தலைவராக உள்ள டிஏ அருள்பதி தலைமையிலான அணியும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். அருள்பதிக்கு தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனாலும் இந்தத் தேர்தலிலும் எந்த அணி ஜெயிக்கும் என்கிற ஆர்வம் உண்டாகியுள்ளது. இந்த இரு அணிகள் தவிர கலைப்புலி சேகரன் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுகிறார்.

இத்தேர்தல் குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எஸ்.வி. சேகர் கூறியதாவது:

ஆர்.கே. நகர் தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று பேச நமக்கெல்லாம் தகுதியே இல்லை. அதுவாவது அரசியல் தேர்தல். ஆனால் இங்கே நடக்கும் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தலிலும் எதிர் அணியினர் பணமும் தங்க காசும் தருகிறார்கள். இவ்வளவு செலவு செய்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ளவேண்டும். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த பதவியில் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இந்தத் தேர்தலில் அருள்பதிதான் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் இந்த அமைப்பு சரியான பாதையில் செல்லும். ஞானவேல் ராஜா போன்றவர்களை அனுமதிக்காதீர்கள் என்று பேசினார்.

நாளை காலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.