அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெரியாரைப் பற்றி சும்மா பேசினால் போதுமா? சத்யராஜுக்கு கமல்ஹாசன் கேள்வி!

தந்தை பெரியார் பற்றி சும்மா பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? செயலில் எதுவும் காட்ட வேண்டாமா என்று சத்யராஜூக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:58 am

DIN

சென்னை: தந்தை பெரியார் பற்றி சும்மா பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? செயலில் எதுவும் காட்ட வேண்டாமா என்று சத்யராஜூக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது தமிழக அரசியலில் நடந்து வரும் விவகாரங்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் அவ்வப்பொழுது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக வெளியிட்டு வருகிறார்.  

அந்த வரிசையில் தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வம் நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து பேட்டியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.

இது தொடர்பாக கருத்துக்களை நேற்றிரவே டிவிட்டரில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதே போல  இது தொடர்பான கருத்துக்கள்  இருந்தால் மற்றவர்களும் அதனை தயங்காமல் வெளியிட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதில் அவர் நடிகர் சத்தியராஜை நோக்கி அவர், "சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம,இந்த நேரத்துல ஒரு dubsmash ஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் then only actors" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நடிகர் மாதவனை நோக்கி அவர் தமிழகத்தில் நிலவும் சிக்கலைப் பற்றி பேசுங்கள்.  உங்கள் கருத்து மாறுபட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. பேசுங்கள் என்று கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.