யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நம்பிக்கை துரோகம் சகிக்கவில்லை: ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகர் பார்த்திபன்! 

நம்பிக்கை துரோகமும், துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கவில்லை என்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை புரிந்த நடிகர், இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 பிப்ரவரி 2017, 10:12 am

DIN

சென்னை: நம்பிக்கை துரோகமும், துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கவில்லை என்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை புரிந்த நடிகர், இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.  .

தமிழகத்தில் முதல்வர் பதவியை மையமாக வைத்து பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.  முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் நடிகரும், இயக்குனாருமான பார்த்திபன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"முதன்முறையாக மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன். தியானிக்க அல்ல... ஜீரணிக்க! மரணத்தின் மர்மம், மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மவுனத்தின் மாமர்மம், அரசியல் அதர்மங்கள், ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள், ரிமோட்டாய் கோடிகள், நடப்பவை நடந்தவை. விளங்காமல் கலங்கரை விளக்கத்திலிருந்து நடந்து சென்றேன். கட்சிகளின் கல்மிஷங்கள் இல்லாத எம்.ஜி.ஆரி-ன் விசுவாசிகள், அதிமுக தொண்டர்கள், அறியா பொதுஜனங்கள் அணையா தீபங்களாய் அங்கே ஒளியூட்டல் ! 'அம்மா' என்றழைக்கப்பட்டவரின் ஆன்மா என்ன நினைக்கும்? எனக்கும் அவருக்குமான சில சந்திப்புகளும் சம்பாஷைனைகளும் வந்து போயின நினைவில்! நம்பிக்கை துரோகமும், துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கவில்லை. சசிகலாவோ, ஓ.பி.எஸ்.ஸோ ஆட்சியமைப்பது சட்ட பூர்வமேயாகையால் சட்டு புட்டுன்னு சட்டசபைக்கு வந்து மக்கள் பணி பாருங்கள்! எம்மக்கள் திருந்திவிட்டார்கள்! மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் ! நோட்டுக்காக அல்ல! நாட்டுக்காகவே ஓட்டு!"

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.