இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சி 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள்.
டிசம்பர் மாத இறுதியில் வெளியாக இருந்த சிங்கம் 3, ஜனவரி 26 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் மீண்டும் தள்ளிவைக்கவேண்டிய நிலைமை உண்டானது. இந்நிலையில் பிப்ரவரி 9 அன்று சி 3 படம் வெளிவரும் என்று தற்போது உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படக்குழு செய்தியாளர்களை நேற்று சந்தித்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தைச் சேர்ந்த ஞானவேல் ராஜா கூறியதாவது:
உலகம் முழுக்க பிப்ரவரி 9-ம் தேதி சி 3 படம் வெளியாகவுள்ளது. படத்தை பிரிவியூவில் பார்த்த அனைவருக்கும் படம் மிகவும் பிடித்ததாகச் சொன்னார்கள். ரஜினிக்குப் பிறகு கோலிவுட்டில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர் சூர்யா. அவருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். எனவே சி3 தெலுங்குப் பதிப்பும் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.
சி 3 படம் வெளியாகத் தாமதமானதற்கு நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், வர்தா புயல், பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டம் என பல்வேறு காரணங்களால் படம் வெளியாகத் தாமதமானது. பிப்ரவரி மாதம் ஸ்டூடியோ கிரீனுக்கு ராசியான மாதம். 10 வருடங்களுக்கு முன்பு கார்த்தி நடித்த பருத்தி வீரன் பிப்ரவரி மாதத்தில்தான் வெற்றி பெற்றது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


