4 -வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்று எவ்வளவு? (நவ. 13)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

தங்கம் விலை - கோப்புப்படம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 960 குறைந்து விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை இந்த வாரத்தில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 360, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 1,560, வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 1,600 குறைந்த நிலையில் 4 ஆவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை
இன்று (நவ. 13, வியாழக்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 12,695 -க்கும், சவரனுக்கு ரூ. 960 குறைந்து ரூ. 1,01,560 -க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் ரூ. 4,480 குறைந்துள்ளது.
இந்த நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக தங்கம் விலை கடந்த நவ. 5 அன்று ஒரு சவரன் ரூ. 1,16,816 -க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 195 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
Gold and silver rate today in chennai, Tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

