சூர்யா பிறந்தநாளன்று ஆச்சர்யம் காத்திருக்கிறதாம்!
இந்தப் படத்தின் டீசரோ முதல் பார்வை போஸ்டரோ இதுவரை வெளியிடவில்லை...


நானும் ரெளடிதான் படத்துக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இசை - அனிருத்.
இந்தப் படத்தின் டீசரோ முதல் பார்வை போஸ்டரோ இதுவரை வெளியிடவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்குக் கோரிக்கை வைத்து வந்தார்கள். பல புதிய படங்களின் முதல் பார்வை போஸ்டரோ, டீசரோ வெளிவந்தால், பாருங்க இந்தப் படத்தின் டீசர், போஸ்டர் எல்லாம் வெளிவருகிறது. எப்போதுதான் நம்ம படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பார்ப்பது என்று மிகவும் ஆதங்கப்பட்டார்கள்.
இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படுவதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னொரு ஆச்சர்யமும் உள்ளதாக அறிவித்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...