வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ரஜினியின் அரசியல் பிரவேசம்: ஆர்வத்துடன் காத்திருப்பதாக தனுஷ் பேட்டி

எனக்கு அரசியல் தெரியாது. எனவே அதைப் பற்றி பேச விரும்பவில்லை... 

News image
Updated On :25 ஜூலை 2017, 9:10 am

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகவிருந்தது. இந்நிலையில் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விவேகம் படம் வெளியான இரு வாரங்கள் கழித்து வேலையில்லா பட்டதாரி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் தனுஷ், கஜோல், செளந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது தனுஷ் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியதாவது

எனக்கு அரசியல் தெரியாது. எனவே அதைப் பற்றி பேச விரும்பவில்லை. ரஜினி சாரின் மனத்தில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. அனைவரையும் போல நானும் அவருடைய அரசியல் நுழைவை எதிர்பார்க்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.