கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காதல் தேசம் ‘தபு’ அகில் அக்கினேனிக்கு அம்மாவாக டோலிவுட் ரீஎண்ட்ரி!

அகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘சுட்டிக் குழந்தை’ திரைப்படத்திலும் தபு இருந்தார்.

News image
Updated On :1 ஜூன் 2017, 9:50 am

சரோஜினி

தபுவை மறக்க முடியுமா? குறைவான படங்களில் தான் நடித்தார் என்றாலும் நடித்த வரையில் அனைத்துமே நினைவில் நிற்கும் அருமையான படங்களில் நடித்தவர். காதல் தேசம், காலாபாணி (சிறைச்சாலை), இருவர், கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன், ஸ்னேகிதியே என்று அனைத்திலுமே தபுவை மறக்க முடியாது. தமிழில் கடைசியாக தபு நடித்தது விக்ரம், பரத் நடித்த டேவிட் திரைப்படத்தில். தெலுங்கில் ‘இதி சங்கதி’ என்றொரு திரைப்படமே தபு கடைசியில் தோன்றியது. பல வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் தனது நண்பரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகார்ஜுனாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது மகன் அகில் அக்கினேனியின் இரண்டாவது படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அகிலின் முதல் படம் சரியாகப் போகாததால் வருத்தத்தில் இருக்கும் நாகார்ஜுனா தனது மகனுக்காக சொந்த தயாரிப்பில் ‘மனம்’ இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் இந்த இரண்டாவது படத்தை உருவாக்கி வருகிறார். அக்கினேனி குடும்பத்தின் வாரிசுகள் அனைவரும் இடம்பெற்ற 'மனம்' படம் வசூல் ரீதியாக மட்டுமல்ல படமாக்கப் பட்ட முறையிலும் அந்த திரைப்படத்துக்கு கிடைத்த வெற்றியை ஒட்டியே மீண்டும் விக்ரம் குமாரையே தனது மகனை இயக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் நாகார்ஜுனா.

இந்தப் படத்தில் இப்போதைக்கு ஸ்பெஷல் தபு ரீ எண்ட்ரி தான். அகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘சுட்டிக் குழந்தை’ திரைப்படத்திலும் தபு இருந்தார். நட்புக்காக ஒரே ஒரு பாடல்காட்சியில் தோன்றி இருப்பார். தற்போது ஹீரோவாக அறிமுகமாகி விட்ட அவரது இரண்டாவது படத்திலும் தபு இருக்கிறார் என்பது தபு மற்றும் நாகார்ஜுனா ரசிகர்களுக்கு உவப்பான செய்தியாக இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.