சூர்யா, முதன்முதலில் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற படத்தை தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். அந்த படம் ஓரளவு நல்ல பெயர் மற்றும் வசூல் கொடுத்ததை அடுத்து ‘பசங்க 2’ என்ற படத்தையும் தயாரித்து தான் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் என்பதையும் சூர்யா நிரூபித்தார். அவரது 3வது தயாரிப்பு '24’ வெற்றி பெற்றது. நான்காவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் கிரிஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பிரம்மா இயக்கத்தில் 'மகளிர் மட்டும்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
தற்போது சூர்யாவின் அடுத்த தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள 'செம' படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது ராஜ்சேகர் பாண்டியன் சூர்யாவின் புதிய படத்தைப் பற்றிய செய்தியை மீடியாவுக்குத் தெரிவித்தார்.
தற்போது கார்த்தி 'தீரன் அதிகாரம் ஒன்று' எனும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் இன்னும் தலைப்பிடப்படாத பாண்டிராஜ் படத்தில் நடிப்பார். சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் முதல் படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடக் கடைசியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!
குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


