தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ரூ.100 கோடி வசூல் செய்த ‘புலி முருகன்’ தமிழில் நாளை வெளியீடு!

மலையாளத்தில் ரூ. 100 கோடி வசூலைத் தொட்ட முதல் படம், புலி முருகன்...

News image
Updated On :15 ஜூன் 2017, 5:31 am

மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, நமிதா உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் புலி முருகன். திரைக்கதை ரீதியாக பரவலான பாராட்டுக்களைப் பெற்ற இப்படம், வசூலிலும் சாதனை புரிந்தது. 

வைஷாக் இயக்கத்தில் முலக்குப்பாடம் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வெளிவந்த இப்படம், மோகன்லாலின் திரைப் பயணத்தில் முக்கியமானதொரு படமாகவும் பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் வெளியான எந்தவொரு படமும் ரூ. 100 கோடி வசூலைத் தொட்டதில்லை. இந்த உயரத்தை எட்டிய முதல் மலையாளப் படம் - புலி முருகன். இந்த வசூலெல்லாம் ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களுக்கே உரியதாக இருந்த நிலையில் தனது 35-வது நாளில் ரூ. 100 கோடியை வசூலை எட்டி சாதனை செய்தது.  

மலையாளத்தில் பெற்ற வெற்றியையடுத்து, தமிழில் டப் செய்யப்பட்டு நாளை வெளிவருகிறது. 2டி மற்றும் 3டி என இரு வடிவங்களில் 305 திரையரங்குகளில் இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.