பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதற்காக அவர் சிலம்பம் கற்றுவருகிறார். 24ஏம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சமந்தா தவிர சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம், சிம்ரன், சூரி, நெப்போலியன், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இன்று தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி - பிப்ரவரியில் முடிவடையவுள்ளது. ஏப்ரலில் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயனின் 12-வது படம்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துவருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் செப்டம்பர் 29 அன்று வெளிவருகிறது. இதற்கடுத்ததாக சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படம் வெளிவரவுள்ளது.






தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கரோனா வைரஸை விட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


