பாகுபலி படத்தின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத், விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் மெர்சல் படத்திலும் பங்காற்றியுள்ளார்.
தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் படம் - மெர்சல்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
விஜய் 61 என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் படத்தின் தலைப்பும் விஜயின் பிறந்தநாளையொட்டி (ஜூன் 22), நேற்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்பட்டது. படத்துக்கு மெர்சல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடி முதல் விஜய் ரசிகர்கள் இப்படம் பற்றிய புதிய தகவல்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். பிறகு நள்ளிரவில் படத்தின் மற்றொரு போஸ்டரும் வெளியிடப்பட்டது.
நேற்று வெளியிடப்பட்டுள்ள மெர்சல் படத்தின் முதல் பார்வை போஸ்டர்களில் பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. பாகுபலி படம் பார்த்தபிறகு இயக்குநர் அட்லி, விஜயேந்திர பிரசாத்தை அணுகி தனது அடுத்தப் படத்தில் பணியாற்றும்படிக் கேட்டுக்கொண்டார். அதன்படி இந்தக் குழுவில் அவரும் இணைந்துள்ளார்.
மெர்சல் படப்பிடிப்பு ஆரம்பித்தபிறகு இயக்குநர் ராஜமெளலி, தனக்குத் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்ததாக அட்லி முன்பு கூறியிருந்தார். பாகுபலி படத்துக்குக் கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் மெர்சல் படத்துக்குத் திரைக்கதை அமைத்துள்ளார். மெர்சல் படத்தின் கதை, வசனம் ஆகிய பொறுப்புகளை இயக்குநர் அட்லி ஏற்றுக்கொண்டுள்ளார். பாகுபலி கதாசிரியர் திரைக்கதை உருவாக்கத்தில் மெர்சல் படம் தயாராகிவருவதால் இப்படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. தீபாவளியன்று படம் வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


