புத்தம் புது ஹீரோக்களாகவிருக்கும் இரண்டு வாரிசு நடிகர்கள்!

நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஊகாவின் (தமிழில் சிவரஞ்சனி) வாரிசான ரோஷன் மேகா, நிர்மலா கான்வெண்ட் திரைப்படம் மூலமாக இளம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.
புத்தம் புது ஹீரோக்களாகவிருக்கும் இரண்டு வாரிசு நடிகர்கள்!
Published on
Updated on
2 min read

டோலிவுட்டில் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஊகாவின் (தமிழில் சிவரஞ்சனி) வாரிசான ரோஷன் மேகா, நிர்மலா கான்வெண்ட் திரைப்படம் மூலமாக இளம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். ஹீரோவாவதற்கு முன்பே இவர் ருத்ரம்மா தேவி திரைப்படத்தில் ராணா டகுபதி ஏற்று நடித்த சாளுக்கிய வீரபத்ரா வேடத்தின் இளம் சாளுக்கிய வீரபத்ரனாக அறிமுகமாகி விட்டார். இருந்தாலும் ஹீரோவாக நிர்மலா கான்வெண்ட் தான் முதல் முயற்சி.

இதில் ஹீரோயினாக அறிமுகமாகவிருப்பதும் முன்பு நமக்கெல்லாம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவர் தான். அந்தச் சிறுமியை நீங்கள் சூர்யா, ஜோதிகாவின் ‘சில்லுன்னு ஒரு காதல்’ திரைப்படத்தில் ஜோ’வின் மகளாகக் கண்டிருப்பீர்கள். அந்த ஷ்ரேயா ஷர்மாவே தான் ரோஷனின் நாயகி!

ரோஷனைத் தொடர்ந்து என்.டி.ஆர் குடும்பத்தில் இருந்தும் ஒரு வாரிசு நடிகர் ஹீரோவாக களமிறக்கப் பட உள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகனான மோக்‌ஷாக்னா நந்தமூரி.  சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் டோலிவுட்டில் வெற்றிப் படமாக அமைந்த 'கெளதம புத்திரா சதகர்ணி' எனும் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் விரைவில் படமாக்கப் படவுள்ளது எனவும். அந்தப் படத்தில் உயிர் பிழைத்து மீளும் கெளதம புத்ரா சதகர்ணியின் மகனான 'உலோமா' வின் வேடத்தில் மோக்‌ஷாக்னா ஹீரோவாக விரைவில் அறிமுகமாகலாம் என்றொரு பேச்சிருக்கிறது. 


நந்தமூரி குடும்பத்தில் வெற்றிகரமான நடிகர்களாக இதற்கு முன்பே நந்தமூரி ஸ்ரீகிருஷ்ணா, பால கிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர், நந்தமூரி கல்யாண்ராம் எனச் சிலர் உள்ள நிலையில் மோக்‌ஷாக்னாவும் ஹீரோவாக அறிமுகமானால் அவரது வெற்றி உறுதி என பாலையா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனராம்.

தெலுங்கில் தற்போது வாரிசு நடிகர்களாகக் கோலோச்சி வரும் பிரபாஸ், ராணா, அல்லு அர்ஜூன், ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆரை அடுத்து  நம்பிக்கையளிக்கும் அறிமுகங்களாகக் கருதப் படும் இந்த  இளம் தலைமுறை நடிகர்களின் திரை வெற்றிகளைப் பொறுத்தே அவர்களது அறிமுகம் ஜெயமா? இல்லையா? எனத் தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com