சினிமாவை விட தொலைக்காட்சியில் நான் அதிக மக்களைச் சென்றடைவேன்: கமல்!

இதற்கென 14 பிரபலங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. நாளை ஒளிபரப்பாக விருக்கும் முதல் எபிசோடில் கமல் அவர்களை அறிமுகப் படுத்துவார்.
சினிமாவை விட தொலைக்காட்சியில் நான் அதிக மக்களைச் சென்றடைவேன்: கமல்!
Published on
Updated on
1 min read

நாளை முதல் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகவிருக்கிறது கமல் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. கமல் தனது திரைப்பங்களிப்பில் இதுவரை ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குனர், இயக்குனர், எனப் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அதன் நீட்சியாக முதல்முறை தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளராகவும் அறிமுகமாகிறார். சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அவரது முதல் பங்களிப்பு இது;

அதைப் பற்றிப் பேசுகையில்; 'நான் சினிமாவைக் காட்டிலும் தொலைக்காட்சி மூலம் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைவேன் என்கிறார்.  கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை... பிரபலங்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை 100 நாட்களுக்கு வெளியுலகத் தொடர்பே இல்லாமல் ஒரு அறையினுள் தங்க வைத்து, வெளி உலகத் தொடர்பிலில்லாத நிலையில் அவர்களது செயல்பாடுகளை கண்காணிப்பதே ஆகும். இதற்கென 14 பிரபலங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. நாளை ஒளிபரப்பாக விருக்கும் முதல் எபிசோடில் கமல் அவர்களை அறிமுகப் படுத்துவார். அந்த 14 பிரபலங்களின் செயல்பாடுகளையும் முதலில் கண்காணிப்பவராக, காண்பராக தான் இருக்கப் போவதால் கமல் தன்னை ‘ஃபர்ஸ்ட் விட்னஸ்’ என்று குறிப்பிடுகிறார்.

தன்னுடைய சின்னத்திரைப் பிரவேசம் பற்றிப் பேசுகையில் கமல் கூறியது; 'இந்த நிகழ்ச்சி அறிவிக்கப் படுவதற்கு முன்பு சேனல் நிர்வாகம் இதற்கென ஒரு சர்வே நடத்தியது... சர்வேயில் கிடைத்த முடிவுகளின் படி 97% மக்கள் எனது சின்னத்திரைப் பிரவேசத்தை உற்சாகமாக வரவேற்கிறார்கள். அது மட்டுமல்ல நான் சின்னத்திரையோடு நின்று விடப் போவதில்லை. அடுத்து ஸ்மார்ட் ஃபோன்களில் மட்டுமே காணக்கூடிய வகையிலான நிகழ்ச்சிகள் வரையிலும் செல்லலாம் என்றிருக்கிறேன். புதுமைகளைக் கண்டு நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை... இனி அவற்றைக் கண்டு ஆச்சர்யப் படத்தான் வேண்டும். மேலை நாடுகளில் கெவின் ஸ்பேஸி போல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக இருந்து புகழ் பெற்ற பிரபல நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நாம் சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். என்றார்.

நாளை முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக் பாஸ் னிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகுமாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com