விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கெளதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் டிடி!

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் - துருவ நட்சத்திரம்...

News image
Updated On :29 ஜூன் 2017, 10:47 am

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் - துருவ நட்சத்திரம். இந்தப் படத்தின் நடிகர் பட்டியலில் பல பிரபல நடிகர்கள் இணைந்துள்ளார்கள்.

இப்படத்துக்கான கதாநாயகியாக அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகி விடவே, தற்போது ரீது வர்மா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கௌதம் வாசுதேவ்மேனனின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ஜோமன் மாற்றப்பட்டு சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் மகன். இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் விக்ரமின் ஜோடி எனவும், ரீது வர்மா கதையின் முக்கிய வேடம் ஏற்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் ஒளிப்பதிவாளரும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தான கிருஷ்ணனுக்குப் பதிலாக மனோஜ் பரஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் கெளதமுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பணியாற்றியுள்ளார். 

இந்தப் படத்தின் நடிகர்கள் பட்டியலில் மேலும் நடிகர்கள் சிலர் இணைந்துள்ளார்கள். பார்த்திபன், சிம்ரன், ராதிகா, தொகுப்பாளர் டிடி, சதீஷ் ஆகியோர் புதிதாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள். பவர் பாண்டி படத்துக்குப் பிறகு டிடி நடிக்கும் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.