மலம் அள்ளும் தொழிலாளர்களின் நலன் சார்ந்த போராட்டங்களில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் திரைக்கலைஞர்களில் இயக்குனர் பா. ரஞ்சித்தும் ஒருவர். அவரது ‘நீலம் புரொடக்சன்ஸ்’ மற்றும் ‘ஜெய்பீம் மன்றம்’ சார்பாக ‘மஞ்சள்’ என்ற தலைப்பில் நாடக நிகழ்வு ஒன்றை பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான ஜெயராணியுடன் இணைந்து நடத்தவிருக்கிறார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி, தொல், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சு.திருநாவுக்கரசர், கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியன், கு.ஜக்கையன், ம.மதிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சத்யராஜ், ராம், வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட திரை ஆளுமைகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலை நாடுகளில் இயந்திரம் மூலம் நிறைவேற்றப் படும் மலம் அள்ளும் வேலை இந்தியாவில் மட்டும் எத்தனை வலிமையான பிரச்சாரங்கள் மேற்கொண்ட போதிலும் மனிதக் கைகளால் அள்ளப்படும் அவலம் தீருவதாக இல்லை.