தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாநகரம் பட இயக்குனருக்கு போனில் வந்த ஸ்பெஷல் வாழ்த்து! 

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'மாநகரம்' திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை புகழ் பெற்ற நடிகர் ஒருவர் ..

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:14 am

DIN

சென்னை: சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'மாநகரம்' திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை புகழ் பெற்ற நடிகர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சர்ப்ப்ரைசாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ, சந்தீப் கிஷன்,  சார்லி, ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘மாநகரம்’. பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் தயாரித்திருந்த இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் என்னும் புதிய இயக்குனர் இயக்கியிருந்தார்.

பரவலாக பலராலும் பாராட்டப்பட்ட இந்த படத்தை 'சூப்பர் ஸ்டார்' ரஜினியும் கண்டு களித்துள்ளார். படத்தை பார்த்த பிறகு அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரையும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுவாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் தனது முகநூல்பக்கத்தில், " ஒரு phone call "கண்ணா ஹா ஹா" அவர்தான் அவரேதான் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மாநகரம் பார்த்துவிட்டு... இன்னிக்கு தூங்கனமாதிரிதான்..” என்று சந்தோசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.