நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை! 

பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் மும்பையில் கட்டிடமொன்றின் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:14 am

DIN

மும்பை: பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் மும்பையில் கட்டிடமொன்றின் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜெயசுதா. நடிப்புத் துறையில் இருந்து விலக்கியவுடன் சிறிது காலம் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

இவர் இரண்டு வருட காதலுக்கு பிறகு திரைபடத் தயாரிப்பாளரும், பாலிவுட் நடிகர் ஜித்தேந்திராவின் ஒன்று விட்ட சகோதரருமான் நிதின்கபூரை 1985-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நிகர்  மற்றும் ஷ்ரேயன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நிதின் கபூர் மும்பையில் அடுக்கு மாடிக் கட்டிடமொன்றின் உச்சியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் என்னவென்பது தெரியவில்லை.

ஆனால் நிதின் கபூர் கடுமையானமான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கு மனோதத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.