துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிக கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசுரன்.
அரவிந்த் சாமி - தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகியோர் இதில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது.
கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் நாக சைதன்யா. அதன்பிறகு அவர் நடிக்கும் தமிழ்ப் படமாக இது இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது இந்தப் படத்திலிருந்து நாக சைதன்யா விலகியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். ஜூலைக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை கார்த்திக் நரேன், கெளதம் மேனன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
2012-க்குப் பிறகு தமிழில் மிகக்குறைவான படங்களில் நடித்துவரும் ஸ்ரேயா, தற்போது சிம்பு நடிக்கும் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


