கார் விபத்தில் தான் இறந்துபோனதாக வெளியான தகவலுக்கு நடிகை ரேகா வி. குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் - பேரணாம்பட்டு அருகே ஏற்பட்ட கார் விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த 22 வயது டிவி நடிகை ரேகா சிந்து உயிரிழந்தார். ஆனால், ரேகா சிந்துவுக்குப் பதிலாக தெய்வமகள் நாடகத்தில் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்துவரும் ரேகா வி. குமார் இறந்துபோனதாக முதலில் தகவல் வெளிவந்தது. செய்திகளில் அவருடைய புகைப்படமும் வெளியானது. இதனால் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து தன்னுடைய ஃபேஸ்புக் வழியாக இச்செய்தியை மறுத்தார் ரேகா. அவர் கூறியதாவது: நான் நலமாக உள்ளேன். நான் இறந்ததாக வந்த தகவல் தவறானது. குடும்பத்துடன் சிருங்கேரி கோயிலுக்கு வந்துள்ளேன் என்று கூறினார்.
கன்னட டிவி நடிகை ரேகா சிந்து, படப்பிடிப்புக்காக சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இன்று காலை 2.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது.
காரில் ஆறு பேர் இருந்துள்ளார்கள். கார் ஓட்டுநர் தூக்கத்தில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. விபத்தில் மேலும் இருவருக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விபத்து குறித்து வேலூர் காவல்துறை விசாரணை செய்துவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


