ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அன்னையர் தினத்தில்  தாய்க்கு கோவில்: அசத்தல் லாரன்ஸ்!

சர்வதேச அன்னையர் தினமான இன்று நடிகர் லாரன்ஸ் தன் தாய்க்கு தான் கட்டியுள்ள கோவிலைத் திறந்துள்ளார்.

News image
Updated On :15 மே 2017, 1:20 am

DIN

சென்னை: சர்வதேச அன்னையர் தினமான இன்று நடிகர் லாரன்ஸ் தன் தாய்க்கு தான் கட்டியுள்ள கோவிலைத் திறந்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தயார் கண்மணி அம்மையாரை போற்றும் விதமாக, அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் தான் தனியாக கட்டியுள்ள கோவிலை நிறுவியுள்ளார்.

இங்கு கண்மணி அம்மையாரின் பளிங்கு சிலையுடன் ர் சிலையுடன் காயத்திரி தேவி சிலை, சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளையும் திறந்து வைத்து அவற்றிற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இன்று காலை 8.45 மணிக்கு கண்மணி அம்மையாரின் சிலையை ராகவா லாரன்ஸ் முன்னிலையில் சினிமா சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் திறந்து வைத்தார். விழாவில்  ராகவா லாரன்ஸ், அவரது தாயார் கண்மணி, மனைவி லதா, மகள் ராகவி, சகோதரர்கள் எல்வின், முரளி, தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் சாய் ரமணி மற்றும் ஏராளமான பொது மக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் பேசிய லாரன்ஸ்,  'எனது அன்னைக்கு அமைத்துள்ள இந்த ஆலயம் உலகில் உள்ள எல்லா அன்னையர்க்கும் சமர்ப்பணம்' என்று தெரிவித்தார்.

உயிரோடு வாழும் காலத்திலேயே தாய்க்கு ஒருவர் கோவில் கட்டி சிலை திறப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.