சவாலான கதாபாத்திரங்கள் என்றாலே நடிகர் கிஷோருக்கு மிகவும் பிடிக்கும் போல தெரிகிறது. நல்ல கதை அம்சமுள்ள படங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை உடனுக்கு உடன் ஏற்று நடிப்பதில் மூலம் தன நடிப்பு பசிக்கு நிரந்தரமாக தீனி போட்டுக் கொண்டு இருப்பவர். இவர் நடிப்பில் தற்போது தயாராக உள்ள 'கல்கி ' என்ற 45 நிமிட படம் சர்வதேச அளவில் பெரும் பெயர் ஈட்டி தரப்பு போகும் படம் என்று திரை உலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிரமோத் பிலிம்ஸ் என்னும் புதிய படநிறுவனத்தின் சார்பில் ஸ்ருதி தயாரிக்கும் இந்தப் படத்தில் கிஷோருக்கு இணையாக நடிப்பவர் யாஸ்மின். இந்தப் படத்தின் போஸ்டர் பெருமளவில் அனைவரையும் கவர்ந்து உள்ளது என்றால் மிகை ஆகாது. புதிய இயக்குனர் திலீப் இயக்க, பிரபல பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன் திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு மற்றும் கிரிஷ் இசை அமைக்கிறார்.
'இந்தப் படத்தின் தலைப்பே கதை சொல்லும். கல்கி என்றால் அழிப்பவர் என்று அர்த்தம். வெளிநாடுகளில் நடந்துக் கொண்டு இருக்கும் திரைப்பட விழாக்களில் 'கல்கி ' கலந்துக் கொண்டு நமது நாட்டுக்கு சிறப்பு செய்யும். கலை இயக்குனர் ரெம்போனின் பணி மிகவும் போற்றத்தக்கது. கிஷோரின் நடிப்பு அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுக்கும்' எனக் கூறினார் தயாரிப்பாளர் சுருதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வாழ வைக்கும் வள்ளல்
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு!
புதிய திரைப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

மார்ச் 1-ம் தேதி 234 தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம்!
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

