காலா: நிறவெறிச் சொல்லும் எமனின் பெயரும்! ரசிகர்களின் உற்சாகப் பதிவுகள்!

காலா என்ற வார்த்தை தமிழில் இல்லை என்றால் அது தமிழின் பிரச்சினை.... 
காலா: நிறவெறிச் சொல்லும் எமனின் பெயரும்! ரசிகர்களின் உற்சாகப் பதிவுகள்!
Published on
Updated on
2 min read

தனுஷ் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு காலா - கரிகாலன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலை இத்தகவல் வெளியிடப்பட்டது. காலா படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 28ம்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் தலைப்பு வெளியானபிறகு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் படம் தொடர்பான பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டார்கள். அவற்றில் சில:

ராஜு. நா

#காலா = கருப்பு. வடக்கே, தமிழர்களை எள்ளலாகவோ வன்மமாகவோ சுட்டப் பயன்படும் நிறவெறிச் சொல். தருண் விஜய் போன்றவர்கள் இதே காலா'வைப் பயன்படுத்திய போது, கொதித்து எழுந்ததும் அரசியல்தான். 'ஆமாடா...நான் காலாதான்' என எதிர்த்து நிற்பதும் அரசியல்தான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, 'காலா சஸ்மா' என்பது பம்பாய் மாஃபியாவை ஒரு காலத்தில் ஆண்ட சொல். That means கருப்புக் கண்ணாடி! 

Nelson Xavier

"காலா" போஸ்டர் விமர்சனம் !

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இன்னும் சில தினங்களில் நாடு முழுக்க அமலாக இருக்கிறது. பெண்கள் பயன்படுத்தும் குங்குமம், ஸ்டிக்கர் பொட்டு, வளையல் இவற்றிற்கு வரி இல்லை என அறிவித்துவிட்டு, மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருளான நாப்கினுக்கு 12% வரி தொடர்கிறது என அறிவித்திருக்கிறது மத்திய நிதியமைச்சகம்.

இந்தியாவில் 87% பெண்கள் மாதவிடாய் காலங்களில் இன்னமும் பழைய துணி, பிளாஸ்டிக், நியூஸ் பேப்பர், இலைதழைகளை பயன்படுத்திவருவதாக இந்திய சுகாதார அமைச்சம் சொல்கிறது.

விலைகுறைவான நாப்கின்களை வழங்க வேண்டுமென நாடு முழுக்க போராட்டக் குரல்கள் உயர்ந்து வருகிறபோது, GSTஆலோசனைக்குழு கூட்டத்தில் நாப்கின்களுக்கு 12% வரி போட வேண்டும் என்பதைப் பற்றி, அதிகாரிகள் எப்படியெல்லாம் விவாதித்திருப்பார்கள் என்பது நம் கண் முன் வந்துபோகிறது !

இந்தியப் பெண்களுக்கு நாப்கின்களை விட, வளையல்களும் ஸ்டிக்கர் பொட்டுக்களுமே அத்தியாவசியமானவை என்கிற இந்த அரிய சிந்தனைக்கு நல்லதொரு பெயரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் !

"காலா" போஸ்டரில் இருக்கும் சிவப்பு, அந்த 87 சதவிகித பெண்களின் உதிரமாகக்கூட இருக்கக் கூடும் !

Yuva Krishna

காளி
ஜானி
யார்
சிவா
வீரா
பாபா
2.0
காலா

- இரண்டு எழுத்து டைட்டில்களில் ரஜினிகாந்தின் படங்கள்

Ganeshan Gurunathan

ரஜினி போர் வரும்போது பார்ப்போம்னு சொன்னா கிண்டல் பண்றாங்க...! புதுப்பட தலைப்பை காலா'ன்னு வைச்சா கிண்டல் பண்றாங்க...!

அநேகமாக, ரஜினிக்கு நேரம் சரியில்லைன்னு தோனுது. அவருக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் மிக அதிகமாகத் தென்படுகிறது.

Haran Prasanna

காலா என்ற வார்த்தை தமிழில் இல்லை என்றால் அது தமிழின் பிரச்சினை. ரஜினியைக் கேட்காதீர்கள் ப்ளீஸ். 

Haran Prasanna

பா.ரஞ்சித்து ஒரே ஒரு வேண்டுகோள்தான். உங்கள் திரைப்படத்தின் டெம்ப்ளேட் நடிகர்களை நடிக்க வைக்காதீர்கள். ஈவெரா படத்தை எந்த ஃப்ரேமிலும் காட்டாதீர்கள் என்று தனியே சொல்லவேண்டியதில்லை, அவரே செய்துவிடுவார். பேட்டியில் ஈவெராவைப் புகழ்வதும் படத்தில் அம்பேத்கர், புத்தரோடு நிறுத்திக்கொள்வதும் ரஞ்சித் ஸ்டைல். #கொளுத்திவைப்போம்.

சிவாஜி, எந்திரன், கபாலி என ரஜினிக்கு 60 வயதுக்குப் பிறகு ஜாக்பாட்டாக அடிக்கிறது. இது இன்னொரு ஜாக்பாட்டாக அமைய வாழ்த்துகள்.

@twittornewton

காலா காலா காலா ன்னு வேகமாக சொல்லிப் பாருங்கள். சந்திரமுகி படத்தின் லக்க லக்க லக்க டயலாக் வரும்.

Suresh Kannan

காலா!
உனை நான்
சிறு புல்லென மதிக்கிறேன்;
என்றன்
காலருகே வாடா!
சற்றே உனை மிதிக்கிறேன்

**

எவண்டா அவன் பாரதி. தலைவரை திட்றது.. கூட்ரா பஞ்சாயத்த.. 

Rajarajan RJ

கபாலி - வில்லனின் பெயர்
காலா - எமனின் பெயர்

Break the myths! பா ரஞ்சித்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com