மும்பை: நடிகர் ரஜினிகாந்தின் 'காலா' திரைப்படத்தில் அவரோடு நடிக்கும் சக நடிகர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனமான நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கபாலிக்கு பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் 'காலா' . இந்த படத்தினை ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.''காலா ' படப்பிடிப்பானது இன்று காலை சிறு பூஜையுடன் தொடங்கியது
இந்த படத்தில் ரஜினியோடு நடிக்கவிருப்பவர்களை இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிக்காமல் இருந்து வந்தது. தற்பொழுது படப்பிடிப்பு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
அந்த பட்டியல் பின்வருமாறு:
யூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இப்படத்துக்கு கபிலன், உமாதேவி ஆகிய இருவரும் பாடல்களை எழுதுகிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா என தொழில்நுட்ப குழுவினரையும் படக்குழு அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


