ஃபிளாஷ்பேக்: மோடியின் பண மதிப்பிழப்பு திட்டத்தைப் பாராட்டித் தள்ளிய திரையுலகப் பிரபலங்கள்!
இந்தியா கருப்புப் பணத்துக்கு எதிராகப் போராடுகிறது. நாட்டுப்பற்றுமிக்க ஒவ்வொரு குடிமகனும் இன்று நிம்மதியாக உறங்குவார்கள்...


கணக்கில் இல்லாத பணத்தை வெளியே கொண்டுவர, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது. இதையொட்டி கடந்த வருடம் இந்தத் திட்டத்துக்கு தமிழ்த் திரையுலகம் எவ்வாறு வரவேற்பு அளித்தது எனப் பார்க்கலாம்.
ரஜினி: வாழ்த்துகள் நரேந்திர மோடிஜி. புதிய இந்தியா பிறந்துள்ளது. ஜெய் ஹிந்த்.
கமல்: மோடிக்கு சல்யூட். அனைத்துக்கட்சியினராலும் இது கொண்டாடப்படவேண்டிய ஒன்று. முக்கியமாக வருமானவரி கட்டுபவர்கள் இதைப் பாராட்டவேண்டும்.
சூர்யா: மோடிஜி மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுகள். அப்துல் கலாமின் 2020, இனிமேல் கனவு மட்டும் கிடையாது.
அமிதாப் பச்சன்: புதிய 2000 ரூபாய் நோட்டு, ‘பிங்க்’ நிறத்தில் உள்ளது. ’பிங்க்’ தாக்கம்.
நாகார்ஜூனா: வாழ்த்துகள் மோடிஜி. இந்தியா, சிறந்த பொருளாதாரத்தை நோக்கிச் செல்கிறது. இந்தியா ஊழலை எதிர்க்கிறது.
தனுஷ்: சிறந்த முடிவு மோடிஜி. வரலாற்றுச் சிறப்புமிக்கது.
சித்தார்த்: இந்தியா கருப்புப் பணத்துக்கு எதிராகப் போராடுகிறது. நாட்டுப்பற்றுமிக்க ஒவ்வொரு குடிமகனும் இன்று நிம்மதியாக உறங்குவார்கள். இந்த நாளுக்காக நன்றி கூறிக்கொள்கிறேன் மோடி சார்.
ஐஸ்வர்யா தனுஷ்: வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு மோடிஜி. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை இது. ஜெய் ஹிந்த்.
கரன் ஜோஹர்: இது ஒரு மாஸ்டர் ஸ்டிரோக். மைதானத்துக்கு வெளியே பந்தை அடித்துள்ளார்.
அனுஷ்கா சர்மா: நாட்டின் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் தைரியமான முடிவு இது. கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியான இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
ரித்திகா சிங்: மோடிஜி கலக்குகிறார். மோடியிஸம் அட்டகாசம்!
விவேக் ஓப்ராய்: அமெரிக்கா ஓட்டுகளை எண்ணுகிறது. இந்தியா நோட்டுகளை எண்ணுகிறது. சிறந்த முடிவு மோடிஜி.







தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...