ஆக்‌ஷன் த்ரில்லர் சாஹோவுக்காக ‘ஸ்டண்ட் கொரியோகிராபி’ பயிற்சி பெற ஹாலிவுட் சென்றார் பிரபாஸ்!

தெலுங்கில் ஆக்‌ஷன் காட்சிகளில் தனிப்பட்ட கவனம் ஈர்க்கும் வகையில் ஆர்வம் காட்டக்கூடிய நடிகர்களில் பிரபாஸும் ஒருவர். பாகுபலி 1&2 திரைப்படங்களுக்கு முன்பே தான் நடித்த மிர்ச்சி, சத்ரபதி, அடவி ராமுடு, ரெபெ
ஆக்‌ஷன் த்ரில்லர் சாஹோவுக்காக ‘ஸ்டண்ட் கொரியோகிராபி’ பயிற்சி பெற ஹாலிவுட் சென்றார் பிரபாஸ்!
Updated on
2 min read

தான் நடிக்கும் திரைப்படங்களில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களிடையே கோலகலமான வரவேற்பைப் பெற வேண்டும் என்ற ஆசை எல்லா ஆக்‌ஷன் நடிகர்களுக்கும் இருக்கும். ஆக்‌ஷன் திரைப்படங்களில் பல ஹீரோக்கள் ஆர்வம் காட்டினாலும் சிலருக்கு மட்டுமே அவை வெகு கச்சிதமாக அமைந்து பெயர் வாங்கித் தரக்கூடும். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அர்ஜூன், எனப் பல ஹீரோக்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆக்‌ஷன் திரைப்படங்களில் கொடி கட்டிப் பறந்திருந்தாலும் ஆக்‌ஷன் திரைப்படங்கள் என்றாலே இன்றும் ரசிகர்களது கவனத்துக்கு சட்டென்று வரக்கூடியவர்கள் அக்‌ஷன் கிங் அர்ஜூனும், விஜயகாந்தும் தான். அந்த வகையில் ஆக்‌ஷன் காட்சிகளின் மீது அந்த நடிகர்களுக்கு இருந்த தனிப்பட்ட கவனமும், ஆர்வமுமே அதற்கொரு காரணம் எனலாம். 

அந்த வகையில் தெலுங்கில் ஆக்‌ஷன் காட்சிகளில் தனிப்பட்ட கவனம் ஈர்க்கும் வகையில் ஆர்வம் காட்டக்கூடிய நடிகர்களில் பிரபாஸும் ஒருவர். பாகுபலி 1&2 திரைப்படங்களுக்கு முன்பே தான் நடித்த மிர்ச்சி, சத்ரபதி, அடவி ராமுடு, ரெபெல், திரைப்படங்களில் தனது ஸ்பெஷலான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக் கொண்டவர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் பங்கேற்று நடித்ததின் விளைவாகத் தற்போது மேலும் பட்டை தீட்டப்பட்ட ஆர்வத்துடன் தயாரிப்பிலிருக்கும் தனது அடுத்த திரைப்படமான ‘சாஹோ’ வுக்காக மேலும் சிறப்பாக மெனக்கெட்டு வருகிறார்களாம் பிரபாஸும், படக்குழுவினரும்.

சாஹோவில் இடம்பெறவிருக்கும் சண்டைக் காட்சிகள், தற்போது அதிகரித்து வரும் ‘ஸ்டண்ட் கொரியோகிராபி’ எனப்படும் புதிய கலை வடிவத்தில் வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று செய்தி. இதற்காகப் பிரபாஸ் ஹாலிவுட் சென்று அங்கேயே மூன்று வாரங்கள் தங்கி, சாஹோவில் தனக்கு ஆக்‌ஷன் காட்சிகளுக்கான பயிற்சி அளிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் கென்னி பேட்ஸுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதற்காகப் சிறப்புப் பயிற்சி எடுத்து வருகிறார். பிரபாஸின் உடல்மொழிக்கு ஏற்ப அமைக்கப்பட்டு வரும் இந்த சண்டைக்காட்சிகளில் அவரது உடல்மொழியைக் கவனித்து அதற்கேற்ப சண்டைக்காட்சிகளை உருவாக்குவது தான் ஸ்டண்ட் மாஸ்டருக்கான சவாலான வேலை எனக்கூறப்படுகிறது.

சுஜித் இயக்கத்தில் 150 கோடி ரூபாய் தயாரிப்புச் செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ‘சாஹோ’ ஒரு மும்மொழித்திரைப்படம். இத்திரைப்படத்தில் ஹீரோ பிரபாஸ், ஹீரோயின் பாலிவுட் புகழ் ஷ்ரத்தா கபூர், இவர்களுடன் நடிகர் நீல் நிதின் முகேஷும் நடிக்கிறார். ஹாலிவுட் பயிற்சியை அடுத்து இத்திரைப்படக்குழு துபாயில் உள்ள உலகத்தின் உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் சில ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறதாம்.

பாகுபலியை அடுத்து இந்திய அளவில் தனக்கென உருவாகி இருக்கும் ரசிகர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்பெஷல் கவனம் செலுத்தும் பிரபாஸின் இந்தப் படமும் அவரது ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெறுமா என்பது படம் வெளிவந்தால் தெரியும். ஏனெனில், பாகுபலிக்கு முந்தைய பிரபாஸின் ஆக்‌ஷன் திரைப்படங்களான யோகி, ரெபெல், ஏக் நிரஞ்சன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல்ரீதியாக தோல்விப்படங்களென முத்திரை குத்தப்பட்டவை.

Image courtesy: telugu video gallery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com