சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் புத்தம்புது ஹீரோயின்!

இத்திரைப்படத்தில் நிஹாரிகா யாருக்கு ஜோடி என்று தெரியவில்லை. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் என்று இரு ஹீரோக்கள் நடிக்கவிருக்கிறார்கள்
சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் புத்தம்புது ஹீரோயின்!
Updated on
1 min read

நிஹாரிகா கொனிடேலா! சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகவிருக்கும் புத்தம் புது ஹீரோயின். இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் முன்பே நடித்திருந்தாலும், தமிழில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ தான் முதல் அறிமுகப்படம். இத்திரைப்படத்தில் நிஹாரிகா யாருக்கு ஜோடி என்று தெரியவில்லை. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் என்று இரு ஹீரோக்கள் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார். தயாரிப்பு 7 சி என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் & அம்மா நாராயண புரடக்‌ஷன். இத்திரைப்படத்தில்  கதைப்படி நிஹாரிகாவுக்கு செளம்யா, அபயலஷ்மி என்று இரண்டு பெயர்களாம்.

சிரஞ்சீவிக்கு இரு சகோதரர்கள், மூத்த சகோதரர் நாகேந்திர பாபுவின் மகளே நிஹாரிகா. சிரஞ்சீவியின் இளைய சகோதரர் நடிகர் பவன் கல்யாண்.

குழந்தைகள் அனைவருடனும் பலகாலம் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சிரஞ்சீவி சகோதரர்கள், சில வருடங்களுக்கு முன்பிலிருந்து தான் தனித்தனியாகப் பிரிந்து அவரவர் குடும்பமெனத் தனியே வசிப்பதாக டோலிவுட் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com