வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வித்தியாசமான முறையில் வாழ்க்கைத் துணையைத் தேடும் ஆர்யா! தொலைப்பேசி எண் வழங்கி கோரிக்கை!

உங்களுக்கு என்னைப் பிடித்திருந்தால், நான் உங்களுக்கு ஒரு நல்ல துணைவனாக இருப்பேன் என நினைத்தால்...

News image
Updated On :21 நவம்பர் 2017, 7:30 am

எழில்

தான் திருமணத்துக்காகப் பெண் தேடுவதாகவும் தன்னை விரும்புபவர்கள் குறிப்பிட்ட தொலைப்பேசி எண்ணை அழைக்கவேண்டும் என்றும் நடிகர் ஆர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் ஆர்யா, சமூகவலைத்தளங்களில் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த வாரம் உடற்பயிற்சி நிலையத்தில் நான் திருமணம் செய்வது குறித்து பேசிய வீடியோ வெளியானது. அது எனக்குத் தெரியாமல் என் நண்பர்கள் விளையாட்டுத்தனமாகச் செய்தது. ஆனால் அதில் நான் பேசியது எல்லாமே உண்மைதான். 

நான் திருமணத்துக்காகப் பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். பொதுவாகப் பெண் தேடும்போது, அவர்களுடைய பணியிடம் அல்லது நண்பர்கள், உறவினர்கள் மூலமாகப் பெண் தேடுவார்கள். இல்லையென்றால் திருமணத் தளங்கள் வழியாக. ஆனால் நான் அப்படியல்ல. இது தொடர்பான பெரிய தேவைகளோ, கட்டுப்பாடுகளோ என்னிடம் கிடையாது. உங்களுக்கு என்னைப் பிடித்திருந்தால், நான் உங்களுக்கு ஒரு நல்ல துணைவனாக இருப்பேன் என நினைத்தால் 73301 73301 என்கிற தொலைப்பேசி எண்ணுக்கு அழையுங்கள்.

இது விளையாட்டோ, நகைச்சுவையோ கிடையாது. இது என் வாழ்க்கை விஷயம். இந்த எண்ணுக்கு அழையுங்கள். நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட தொலைப்பேசி எண்ணை அழைத்தால் http://www.mapillaiarya.com/ என்கிற இணையத்தளத்தைக் குறிப்பிடுகிறது. இது விளையாட்டா அல்லது நிஜமாகவே ஆர்யா பெண் தேடுகிறாரா என்கிற குழப்பம் சமூகவலைத்தளங்களில் நீடிக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.