கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிம்பு இல்லையேல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது: சந்தானம் உருக்கம்! 

என் குருநாதர் சிம்பு சிம்பு இல்லையேல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்று நடிகர் சந்தானம் உருக்கமாகப் பேசினார்.

News image
Updated On :15 அக்டோபர் 2017, 10:15 am

DIN

சென்னை: என் குருநாதர் சிம்பு சிம்பு இல்லையேல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்று நடிகர் சந்தானம் உருக்கமாகப் பேசினார்.

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவர உள்ள `சக்க போடு போடு ராஜா' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சந்தானம், நடிகர் ஆர்யா, இயக்குனர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் சந்தானம் பேசியதாவது:

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. சிம்பு தான் எனக்கு குருநாதர். அவரது வழிநடத்தலாலேயே தான் இந்த இடத்திற்கு வரமுடிந்தது. இந்த படத்திற்காக இசையமைக்க அவரிடம் அனுகிய போது, முதலில் கொஞ்சம் யோசித்தார், பின்னர் சம்மதம் தெரிவித்து தற்போது பாடல்களுக்கு அருமையாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

அவரது பிசியான செட்யூலிலும் எனது படத்திற்கு சிறந்த இசையமைப்பை அவர் வழங்கியுள்ளார். அத்துடன் , படத்தின் டிரைலருக்காகவும் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தார். மேலும் படத்தில் எனக்கு மாஸான சில பஞ்ச் வசனங்களையும் அவர்தான் எனக்காக எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் 5 இசையமைப்பார்கள் பாடல்களை பாடியுள்ளனர் என்பது படத்திற்கு சிறப்பு. யுவன் இசையில் சிம்பு பாடுவதை கேட்டிருப்போம். சிம்பு இசையில் யுவன் பாடுவதை விரைவில் கேட்போம்.

இவ்வாறு  சந்தானம் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.