
மெர்சல் பிரச்னை, மெர்சல் சர்ச்சை என்று இணையத்தில், சானல்களில் என எங்கு திரும்பினால் மெர்சல் டாக் ஆஃப் தி டவுன் ஆகிவிட்டது. இந்தளவுக்கு வைரலான ஒரு பட விவகாரம் சமீபத்தில் தமிழ் திரையுலகம் சந்தித்ததேயில்லை. படத்தின் பிரச்சனைகள் பல்முனையான மாறிவரும் நிலையில் சமீபத்தில் ஹெச்.ராஜா இப்படத்தை விமரிசித்தது மட்டுமில்லாமல், நடிகர் விஜய் கிறுத்துவர் எனக் குறிக்கும் வகையில் ஜோசப் விஜய் எனக் கூறி விஜயின் அடையாள அட்டைப் புகைப்படத்தை வெளியிட்டு உண்மை கசக்கிறதா என கேட்டது ரசிகர்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.
இதற்கு எதிர்வினையாக திரை உலகினர் மட்டுமல்லாது சில அரசியல்வாதிகளும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தற்போது பாடகி சின்மயி இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜாவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி. எது கசக்கிறது? ஒரு தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவரது ஒப்புதல் இல்லாமல் சமூக வலைதளத்தில் பகிர்வது சட்ட ரீதியானதா? நாளை உண்மையை நிரூபிக்க ஆதார் அட்டை விபரங்களை வெளியிடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.