ட்விட்டரில் கலக்கும் அமிதாப் பச்சன்! 29 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான அமிதாப் பச்சன், தற்போது டிவிட்டரில் 29 மில்லியன் ரசிகர்களை கொண்டிருக்கிறார்
ட்விட்டரில் கலக்கும் அமிதாப் பச்சன்! 29 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்கிறார்கள்!
Updated on
2 min read


 
இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான அமிதாப் பச்சன், தற்போது டிவிட்டரில் 29 மில்லியன் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

'ஷோலே’, 'திவார்’, 'பிளாக்’ மற்றும் 'பிகு’போன்ற படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சன், பிற பாலிவுட் நடிகர்களைவிட மிக அதிகமான ரசிகர்களை மைக்ரோ ப்ளாக்கிங் தளத்தில் கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர்களான ஷாருக் கான் (27.6 மில்லியன்), சல்மான் கான் (25.1 மில்லியன்), அமீர் கான் (21.8 மில்லியன்), பிரியங்கா சோப்ரா (18.9 மில்லியன்) மற்றும் தீபிகா படுகோன் (20 மில்லியன்) ஆகியோரை விட டிவிட்டரில் அதிகளவில் ரசிகர்கள் அமிதாப் பச்சனைத்தான் பின் தொடர்கிறார்கள்.

இதைப் பற்றி அமிதாப் பச்சன் சனிக்கிழமை இரவு தனது ட்விட்டர் பதிவில் கூறியது, '29 மில்லியன் ரசிகர்கள் என்னை ட்விட்டரில் பின் தொடர்கிறார்களா! ஒரு காலத்தில் என் டிவிட்டர் ஒரு நபர் கணக்காக இருந்தது. இன்று அந்த எண்ணிக்கை 29 மில்லியனை எட்டியுள்ளது! இதற்குக் காரணம் நீங்கள் ஒவ்வொருவரும் தான்!’ என்று உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார். தனது அடுத்த இலக்கு 30 மில்லியன் ரசிகர்கள் என்றும் பகிர்ந்துள்ளார் பிக் பி என்று பாலிவுட்டில் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன்.

இந்த வசீகரமான 'Wazir’பட நடிகர், சமூக இணைய தளங்களில்  தீவிரமாகவே இயங்கி வருகிறார். தனது சொந்த மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கைப் பற்றி டிவிட்டரில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

அமிதாப் தற்போது இரண்டு படங்களில் பணிபுரிகிறார். அவை '102 நாட் அவுட்’ மற்றும் ’தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் ’ஆகும்.

இதில், '102 வது அவுட் அவுட்’ படத்தில் மூத்த நடிகர் ரிஷி கபூர் அமிதாப்புடன் நடிக்கிறார். இந்தப்படத்தில் இவர்கள் இருவரும் தந்தை மகனாக நடிக்கிறார்கள் என்கிறது பாலிவுட் வட்டாரம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அமிதாப் - ரிஷி கபூர்  ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ படத்தில் அமீர் கான், கத்ரீனா கைஃப் மற்றும் 'டங்கல்’புகழ் பாத்திமா சானா ஷேக் ஆகியோர் அமிதாப்புடன் நடித்திருக்கிறார்கள். 

1839-ஆண்டு எழுதப்பட்ட 'கன்ஃபஷன்ஸ் ஆஃப் தி தக்’ என்ற நாவலின் தழுவல் தான் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’. இந்தப் படம் 2018 தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com