முன்னாள் நட்சத்திர ஜோடியான பிராட் பிட்-ஏஞ்சலினா ஜோலி சமீபத்தில் மீண்டும் சந்தித்தனர். தீவிரமான 'மறுவாழ்வு மற்றும் ஆன்மிக ஆலோசனைக்குப்’ பிறகு சந்தித்த இந்த ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இந்த முடிவை அவர்கள் ஒருவருக்கொருவர் எந்தளவுக்குத் தேவை என்று உணர்ந்து மிகத் தெளிவாகவே எடுத்துள்ளனர்’ என்று கூறுகிறார் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் இயன் ஹால்பர்.
ஏழு வாரங்களுக்கு முன்னர், பெவர்லி ஹில்ஸ் குடியிருப்புப் பகுதியில், ஒரு சிறிய மூன்று படுக்கையறை கொண்ட ஒரு வீட்டில் இந்த நடிகர்கள் காணப்பட்டனர். அங்கு பத்து மாதங்களுக்குப் பிறகு இந்த ஜோடி முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்தனர்.

'பிராட் பிட் முதல் அடி எடுத்து வைக்க. பின்னர் அவர்கள் இருவரும் கட்டி அணைத்தனர். இருவருமே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண் கலங்கிவிட்டனர்’ என்றார் ஹால்பரின்.
ஒரு நண்பரின் வீட்டில் இந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கிருந்த சமயத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசி முடிவு செய்தனர். தங்களுடைய உறவில் இது மற்றொரு புதிய தொடக்கமாக இருக்கும் என்றும் கூறினர்.
பிராடின் குடி மற்றும் போதை பழக்கம். அதை சார்ந்த பிரச்னைகளால் குழந்தைகள் நலன் கருதி, அவரை நான் பிரிகிறேன் என்று பிரிவிற்கான காரணமாக ஏஞ்சலினா முன்பு கூறியிருந்தார். பல கசப்பான சம்பவங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இடையே இந்த ஜோடி கடந்த செப்டம்பர் மாதம் பிரிந்தது. அவர்களின் பிரிவு திடீரென்று இருந்தது.
சில மாதங்கள் கழித்து விவாகரத்து வழக்கு ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த ஜோடியை இணைத்து வைக்கும் முயற்சிகள் நடந்துவந்தது. அதையொட்டிதான் சமீபத்தில் இந்தச் சந்திப்பும் ஏற்பாடானது. இந்தக் காதல் ஜோடியினர் மத்தியில் சண்டை மேலும் வலுபெற்றுவிடக் கூடாது என்று 'நடுவர்' ஒருவரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். ஆனால் நடுவர் மற்றும் அனைவரும் எதிர்பார்த்ததுக்கு எதிராக பிராட் பிட் ஏஞ்சலினா ஒருவரை ஒருவர்
மிகவும் நேசித்துள்ளனர் என்பது உறுதியானது.

இன்னமும் ஒருவருக்கொருவர் மீதான காதல் மாறவில்லை, மீண்டும் இணைந்து வாழ முயற்சி செய்ய விரும்புகிறார்கள் என்று Dailymail.co.uk எனும் இணையதளம் பதிவு செய்தது. இதற்காக இந்த நட்சத்திர ஜோடி தாமாகவே முன் வந்து தகுந்த ஆலோசனைகள் பெற்று மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது’ எனவும் பாராட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


