ரஜினிக்கு மூன்று முகம் போல விஜய்க்கு மெர்சல்!

சமீபத்தில் வேறெந்த படங்களுக்கும் இந்த அளவுக்கு எதிர்ப்பார்ப்பு இருந்திருக்கவில்லை.
ரஜினிக்கு மூன்று முகம் போல விஜய்க்கு மெர்சல்!
Published on
Updated on
2 min read

சமீபத்தில் வேறெந்த படங்களுக்கும் இந்த அளவுக்கு எதிர்ப்பார்ப்பு இருந்திருக்கவில்லை. யூட்யூபில் பாடல் வெளியானாலும் சரி, டீசர் என்றாலும் சரி, ரசிகர்களின் லைக்குகளையும் பேராதரவையும் அள்ளிக் குவிக்கிறது மெர்சல். விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதும் இப்படத்துக்கான கூடுதல் எதிர்ப்பார்ப்பிற்கான காரணம் எனலாம்.

லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்க, தீபாவளி அன்று இத்திரைப்படம் மிக பிரமாண்டமாக வெளி வர உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் இது வரை 16 மில்லியன் ஹிட்ஸை தொட்டுள்ளது,  8 லட்சத்துக்கும் மேலானோர் லைக் செய்துள்ளனர்.

மெர்சலில் ஒரு பக்கம் கிராமத்து அதிரடி ஆக்‌ஷன் மற்றொரு பக்கம் ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் படம் என்பதை படத்தின் டீசர் சொல்லாமல் சொல்கிறது. கிராமத்து ஹீரோ, மேஜிக் நிபுணன் மற்றும் டாக்டர் விஜயின் மூன்று தோற்றங்களுமே கம்பீரமாகவும் அழகாகவும் உள்ளது.

யூட்யூப் நிறுவனம் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் 'எபிக் தளபதி’ (Epic Thalapathi) என்று குறிப்பிட்டுள்ளார்கள். 'பற்றி எரியும் நெருப்பொன்று. பற்றி எரிய உனைக் கேட்கும். நீ விதைத்த வினை எல்லாம், உன்னை அறுக்கக் காத்திருக்கும்’ என்று விஜய் ஏற்ற இறக்கங்களுடன் வித்தியாசமான குரல் மாடுலேஷனில் பேசியிருக்கும் வசனம் வைரலாகிவிட்டது. மெர்சலின் சாதனைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் விஜய் ரசிகர்களின் மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று கதாபாத்திரங்களில் நடித்த மூன்று முகம் திரைப்படம் இன்றளவும் அவரின் புகழுக்கு ஒரு சான்றாக விளங்கிவருகிறது. போலவே விஜய்க்கு மெர்சல் நிச்சயமாக அமையும் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். 

இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. இருவருக்கும் இடையேயான சில காட்சிகளை நான்கு நாட்கள் படமாக்கம் செய்தாராம் அட்லி. சூர்யாவின் அசத்தலான நடிப்பை விஜய் மனதார பாராட்டியிருக்கிறார்.

படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com