47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமணத்துக்குத் தயாராகிறார் சமந்தா!

சமந்தா நாக சைதன்யாவின் திருமணம் வரும் அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் இந்து

News image
Updated On :26 செப்டம்பர் 2017, 11:22 am

DIN

சமந்தா நாக சைதன்யாவின் திருமணம் வரும் அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி கோவாவில் நடை பெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக செய்து வருகின்றனர். இரு வீட்டாரும் வரும் 1-ம் தேதி கோவா செல்கின்றனர். இந்த திருமணத்திற்கு இதுவரை 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இந்த திருமணத்தைத் தொடர்ந்து வரும் 10-ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில், திரை உலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Story image

திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவரது திருமண ஆடைகளில் ஒன்றை அணிந்துள்ளார். அவரது ஆடை அலங்கார நிபுணர் கர்ஷா பஜாஜ் சமந்தாவின் திருமணத்துக்காக பிரத்யேகமான உடைகளை டிசைன் செய்துள்ளார். அந்த புத்தம் புது டிசைன் ஆடைகளில் வலம் வரத் தொடங்கிவிட்டாராம் சமந்தா. 

இந்து முறைப்படி நடக்கவிருக்கும் திருமணத்திற்கும், அதற்கு முன்பாக நடக்கும் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் கர்ஷா ஆடை வடிவமைக்கும் ஆடையை சமந்தா அணிவார். ஆனால், கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் திருமணத்திற்கு இவர் ஆடை வடிவமைக்கவில்லை என்கிறது சமந்தா வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.