

சென்னை: பிரபல இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் புதிய படமொன்று நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் புகழ்பெற்ற மலையாளப் படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்கான 'நிமிர்' படத்தின் பணிகளை தற்பொழுது முடித்துவிட்டார். பிரபல மலையால இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
அநேகமாக ஜனவரியில் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி கூறிய ஒரு கதை உதயநிதிக்குப் பிடித்து விட அதில் அவர் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட்' மூவீஸ் நிறுவன தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ள தகவலை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு ஜனவரி 19-ம் தேதி முதல் துவங்க உள்ளதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். இருவரும் இணைத்திருக்கும் ஒரு படத்தினை ட்வீட் செய்து அவர் இத்தகவல்களை வெளியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.