
கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ள படம் - உறுதி கொள். கதாநாயகியாக மேகனா நடித்துள்ளார். இயக்கம் - அய்யனார்.
இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது:
திரையரங்கில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்குச் சிறப்பு. அதுதான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. திரையுலகினர்தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி படி அளக்கிறது. அவங்க கஷ்டம் தீரட்டும், பரவாயில்லை. ஆனால் கமல் போன்ற ஒரு சாதனைக் கலைஞர் இதுமாதிரியான நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் சினிமாவை அழிக்கக் காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிகளுக்கு கூட்டம் வருவதில்லை. அதே நிகழ்ச்சி மறுநாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலைக் காட்சிகளுக்கும் கூட்டம் வருவதில்லை. இதனால் எல்லாக் காட்சிகளும் பாதிப்படைந்துள்ளன.
நாளை கமல் படம் வெளிவரும்போது அஜீத்தோ, விஜய்யோ இதுபோன்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, அதனால் தன்னுடைய படத்தின் வசூல் பாதித்தால் என்னவாகும் என கமல் யோசிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.