இது தமிழ்நாட்டு பவர் ஸ்டார் பற்றிய செய்தியில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைப் பொறுத்தவரை பவர் ஸ்டார் என்றால் அது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், ‘ஜன சேனா’ கட்சியின் தலைவருமான பவன் கல்யாணைத் தான் குறிக்கும். அக்கடபூமியின் அசத்தல் யூத் ஐகான்களில் ஒருவரான பவனின் சமீபத்திய வெற்றிப்படம் ‘காட்டமராயுடு’.
இது சிவா இயக்கத்தில் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்து வெற்றியைப் பெற்றுத் தந்த ‘வீரம்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக். இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ள கருத்து ஒன்று தற்போது டோலிவுட்டில் பவன் ரசிகர்களிடையே அனலைக் கிளப்பியிருக்கிறது.
அப்படி என்ன சொன்னார் ராம்கோபால் வர்மா? என்கிறீர்களா? எப்போதுமே தமது தடாலடி கருத்துக்கள் மற்றும் ட்வீட்கள் மூலம் தன்னை சோஷியல் மீடியாக்களிடையே ட்ரெண்டில் வைத்திருக்க ராம் கோபால் வர்மாவுக்குப் பிடிக்கும். அந்த வகையில் இப்போது ‘காட்டமராயுடு’ வில் பவன் கல்யாண் நடிப்பைப் பார்த்து விட்டு ராம் கோபால் வர்மா விட்ட ஸ்டேட்மெண்ட் இது தான்
“போர்ன் திரைப்படங்களைப் பார்ப்பதில் தனக்கு எத்தனை சுவாரஸ்யம் இருந்ததோ... அதே அளவு சுவாரஸ்யம் ‘காட்டமராயுடுவில்’ பவனின் நடிப்பைப் பார்க்கும் போதும் இருந்தது”
என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
ராம் கோபால் வர்மாவின் இந்த தடாலடி ஸ்டேட்மெண்டுக்கு பவன் தரப்பில் இருந்தோ அல்லது காட்டுத் தீ போன்ற அவரது ரசிகர் தரப்பிடமிருந்தோ இன்னும் எதிர்வினைகள் எதுவும் வரவில்லை. ஆயினும் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டதின் மூலம் பவர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பை தானே முன் வந்து ராம் கோபால் கெடுத்துக் கொண்டாரோ என டோலிவுட்டில் ஒரு பேச்சிருக்கிறது. நிஜத்தில் ராம் கோபால் வர்மா பவர் ஸ்டாரை போர்ன் ஸ்டார்களோடெல்லாம் ஒப்பிடவில்லை. அவர் படம் பார்க்கும் போது தனக்கேற்பட்ட தனது மனநிலையைத் தான் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இதை சம்மந்தப் பட்டவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ?! என்ற குறைந்த பட்ச கவனமோ, எஅச்சரிக்கையோ எது ஒன்றுமே வழக்கம் போல ராம் கோபால் வர்மாவின் கருத்தில் இல்லை.
Related Article
சீனாவில் 40,000 திரையரங்குகளில் 2.0 வெளியாகும்: லைக்கா அறிவிப்பு
பிக் பாஸ் ஒரு வக்கிர விளையாட்டு... ஆனால் அதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள்:அனுயா!
ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து!
தமிழ்நாட்டின் ஒருநாள் முதல்வராக கமல்: பிரேமம் இயக்குநரின் பிரமாண்ட கனவு!
அனுஷ்காவைப் பற்றி காமெடி நடிகர் ஜெகனின் அத்துமீறல் கமெண்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



