பட வாய்ப்புகளுக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் அவலம் மலையாளத் திரையுலகில் இல்லை: இன்னொசென்ட்!

பட வாய்ப்புகளுக்காக எந்த நடிகையாவது படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்று செய்திகள் வந்தால் அத்தகையவர்கள் கெட்ட பெண்களாகவே இருப்பார்கள். மலையாளத் திரையுலகில் தற்போது நடிகைகளின் பாதுகாப்புக்கும்...
பட வாய்ப்புகளுக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் அவலம் மலையாளத் திரையுலகில் இல்லை: இன்னொசென்ட்!

திரைப்பட வாய்ப்புகளுக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் அல்லது வற்புறுத்தும் போக்கு மலையாளத் திரைப்பட உலகில் தற்போது இல்லை என்றும்... அப்படி பட வாய்ப்புகளுக்காக எந்த நடிகையாவது படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்று செய்திகள் வந்தால் அத்தகையவர்கள் கெட்ட பெண்களாகவே இருப்பார்கள். மலையாளத் திரையுலகில் தற்போது நடிகைகளின் பாதுகாப்புக்கும், கெளரவத்திற்கும் உத்தரவாதமளிக்கத் தக்க ஆரோக்கியமான சூழலே நிலவி வருகிறது என பிரபல மலையாள நடிகரும், பாராளுமன்ற உறுப்பினரும், மலையாளத் திரைப்பட சம்மேளனமான ‘AMMA' அமைப்பின் தலைவருமான ‘இன்னோசென்ட்’ நேற்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

நடிகை பாவனா காரில் கடத்தப் பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மீண்டதன் பின் மலையாளத் திரைப்பட உலகில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் நடிகைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அதையொட்டி பிரபல மலையாலப் பத்திரிகை ஒன்று; பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப் படும் நிலை இப்போதும் மலையாளப் படவுலகில் உண்டா? என்ற கேள்வியை மூத்த நடிகரும், பாராளுமன்ற உறுப்பினரும், 'AMMA' திரையுலகில் கடந்த காலங்களைப் போல  அமைப்பின் தலைவருமான 72 வயது இன்னொசென்ட்டிடம் கேட்டிருந்தது. அதற்கு அவரளித்த பதிலில் “இல்லை... இப்போது மலையாளத் திரைப்பட உலகம் சுத்தமாகவே இருக்கிறது. அப்படி ஏதாவது விபரீதங்கள் இங்கே இருப்பதாகத் தெரிந்தால் சமூக ஊடகங்கள் சும்மா விடுமா? உடனடியாக அத்தகைய விசயங்கள் கண்டறியப்பட்டு மக்களிடையே வெளிச்சமிடப் பட்டு விடுகின்றன. ஆனால் சில நேரங்களில் பெண்கள் கெட்டவர்களாக இருந்து அவர்களே இம்மாதிரியான விசயங்களுக்கு ஒப்புக் கொள்ளும் போது அப்படியான அபத்தங்கள் நடக்கலாம். என்று தெரிவித்திருந்தார். 

இன்னொசென்ட்டின் இந்த பதிலைக் கேட்டு, பாவனா சம்பவத்துக்குப் பிறகு, நடிகை மஞ்சு வாரியர் தலைமையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மலையாள நடிகைகள் பாதுகாப்புக் கூட்டணியான WCC (Woman in Cinima Collective) உடனடியாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. “ அவரது கூற்றை எங்களால் ஒப்புக் கொள்ள முடியாது... இப்போதும் பட வாய்ப்புகளுக்காக இளம் நடிகைகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை தரும் செயல் மலையாளத் திரையுலகில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. எங்களது சக நடிகைகளான பார்வதி மேனன், லஷ்மி ராய் உள்ளிட்டோர் கூட அப்படியான பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் தான் என்பதை அவர்களே கூறத் தயங்கவில்லை. இப்படி கண் கூடான நேரடி ஆதாரங்கள் இருக்கும் போது... பொது ஊடகங்களில் பொறுப்புணர்வோ, கவனமோ இன்றி இளம் நடிகைகளைப் பற்றி இன்னொசென்ட் போன்ற மூத்த நடிகர்கள் இப்படியான கருத்துக்களைப் பகிரக் கூடாது” என்று WCC அமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com