போதை மருந்து விவகாரத்தில் ஊடகங்கள் உண்மை அறிந்து எழுதலாமே?: நடிகர் தருண் கேள்வி

சில பத்திரிகைகளிலும், ஆன் லைன் ஊடகங்களிலும் நான் மாதத்தில் 15 நாட்கள் கோவாவிலேயே கிடப்பதாக எழுதுகின்றன. சிலர் ஹைதராபாத்தில் இருக்கும் பஃப்களில் நான் பினாமி பெயரில் முதலீடு செய்திருப்பதாக எழுதுகின்றனர்
போதை மருந்து விவகாரத்தில் ஊடகங்கள் உண்மை அறிந்து எழுதலாமே?: நடிகர் தருண் கேள்வி

டோலிவுட்டைக் கலக்கி வரும் போதை மருந்து விவகாரத்தில் அக்கடபூபியில் பிரபல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், டான்ஸர்கள் எனப் பலரது பெயர் டேமேஜ் ஆகிக் கொண்டிருக்கிறது. அவர்களுள் பலர் தங்களது மேல் எந்தக் குற்றமும் இல்லை என்றும் போதை மருந்து கடத்தல், விற்றல் விவகாரத்தில் தங்களது பெயர் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது என்றும் புகார் அளித்துள்ளனர். கடந்த வாரம் இவ்விவகாரம் தொடர்பாக பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார். அப்போது அவரது குடும்பம் மொத்தமும் அவருக்கு ஆதரவாக அவருடனிருந்தது. இவர்கள் தவிர பாகுபலி புகழ் ராணா டகுபதி மீதும் இதே விதமான குற்றச்சாட்டை முன்வைத்து தெலுங்கு ஊடகங்களில் வதந்தி பரவ, உடனடியாக சுதாரித்துக் கோண்ட ராணாவின் அப்பாவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளருமான சுரேஷ் டகுபதி, அம்மாதிரியான செய்திகளுக்கும், வதந்திகளுக்கும் கடும் ஆட்ஷேபம் தெரிவித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். அவரைப் போலவே இன்று நடிகர் தருண் இவ்விசயத்தில் தனது ஆட்ஷேபத்தையும் பதிவு செய்துள்ளார். 

நடிகர் தருணை கோலிவுட் ரசிகர்களும் நன்கு அறிவார்கள். ‘அஞ்சலி’ திரைப்படத்தின் சிறுவனாக வரும் மாஸ்டர் அர்ஜூன் இவர் தான். அவர் தனது ஆட்ஷேபனையில் முன் வைத்ததும் இதையொட்டிய கருத்தைத் தான். அதாவது; ‘ தான் சைல்ட் ஆர்டிஸ்டாக  சைல்டு ஆர்டிஸ்ட்ஆக அறிமுகமானது முதல் இன்று ஹீரோவானது வரை தன்னை மிக ஆதரித்து தன்னை ஊக்கப் படுத்தி எழுதி வந்த ஊடகங்கள் இன்று இந்த போதை மருந்து விவகாரத்தில் மட்டும் தன் மீது தவறு உள்ளதா? இல்லையா? என ஆராயாமலே மனம் போன போக்கில் விதம் விதமாய் வதந்திகளை எழுதித் தள்ளுவது தன்னை மட்டுமல்ல தனது தாய், தந்தை, தங்கை உள்ளிட்ட மொத்தக் குடும்பத்தினரையுமே மிக மோசமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சில பத்திரிகைகளிலும், ஆன் லைன் ஊடகங்களிலும் நான் மாதத்தில் 15 நாட்கள் கோவாவிலேயே கிடப்பதாக எழுதுகின்றன. சிலர் ஹைதராபாத்தில் இருக்கும் பஃப்களில் நான் பினாமி பெயரில் முதலீடு செய்திருப்பதாக எழுதுகின்றனர். சிலரோ எனக்கும், என் அம்மாவின் சினேகித வட்டத்திலுள்ள ஒருவரின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது என எழுதுகின்றனர். இன்னும் சிலரோ நான் ஹைதராபாத்திலுள்ள என் வீட்டு மாடியிலிருந்து குதித்து இறந்து விட்டேன் என எழுதுகின்றனர். அதைப் போலத்தான் இந்த போதை மருந்து விவகாரத்தில் என் பெயரை சேர்த்து வைத்து எழுதுவதும்... இதில் எதுவுமே உண்மை இல்லை. நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான். தயவு செய்து உண்மை என்ன? என்று ஆராய்ந்து தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு இம்மாதிரியான விஷயங்களை எல்லாம் எழுதுங்கள். நீங்கள் இப்படி எல்லாம் எழுதினால், சம்மந்தப் பட்டவரின் மனமும், அவரது குடும்பத்தினரது மனநிலையில் எப்படியெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிந்து கொண்டு பிறகு இப்படி எல்லாம் எழுதுங்கள். உண்மை அல்லாத ஒன்றை நீங்களே வற்புறுத்தி எழுதி மக்களை நம்ப வைக்க முயற்சிக்காதீர்கள் பிளீஸ் என மிக உருக்கமாக தனது வீடியோவில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

தருண் வெளியிட்டுள்ள சுய விளக்க வீடியோ கீழே...

Image courtsy: google.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com