Enable Javscript for better performance
taapsee vs ragavendra rao- Dinamani

சுடச்சுட

  

  பிரபல இயக்குனரைப் பற்றிய விமரிசனத்திற்கு டாப்ஸியின் தன்னிலை விளக்க வீடியோ!

  By சரோஜினி  |   Published on : 15th July 2017 12:48 PM  |   அ+அ அ-   |    |  

  taapsee,_ragavendra_rao

   

  பிரபல தெலுங்கு இயக்குநர் ராகவேந்திர ராவ், கதாநாயகிகளின் வயிற்றுப் பகுதியில் பூக்களை வீசுவது, பழங்களை நழுவச் செய்வது போன்ற காட்சிகளைத் தனது திரைப்படங்களில் வைப்பதை வழக்கமாகக் கொண்டவர். நடிகை டாப்ஸி பன்னுவை தெலுங்கில் அறிமுகப் படுத்தியவரும் இதே இயக்குநர் தான் என்பதால், டாப்ஸிக்கும் அப்படியான காட்சிகளில் ஒன்றில் நடிக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது. அவரது அறிமுகப் படத்தில் அப்படி ஓர் காட்சி இருப்பதாக உதவி இயக்குநர்கள் மூலம் தெரிந்து கொண்ட டாப்ஸி... அந்தக் காட்சியில் நடிப்பதற்காக ராகவேந்திர ராவின் பழைய கதாநாயகிகளான ஸ்ரீதேவி, ஜெயப்ரதா உள்ளிட்ட சீனியர்கள் நடித்த அதே போன்றதான காட்சிகளைப் பார்த்து, அந்தக் காட்சியில் நடிப்பதற்காக தனக்குத் தானே பிராக்டிஸ் எடுத்துக் கொண்டிருந்த வேலையில் இம்முறை பூக்கள், பழங்களுக்குப் பதிலாக தேங்காயை கதாநாயகியின் தொப்புளில் வீசுவதாகக் காட்சியமைப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் கொஞ்சம் அப்செட் ஆன டாப்ஸி அப்போது அறிமுக நடிகை என்பதால் மறுப்பு எதுவும் சொல்லாமல் காட்சியில் நடித்துக் கொடுத்து விட்டு சென்று விட்டார். ஆனால் டாப்ஸிக்கு அந்தக் காட்சியின் அபத்தம் குறித்த நெருடல் மனதிற்குள் நீடித்ததால், சமீபத்தில் தானளித்த பேட்டி ஒன்றில், அந்தப் பழைய சம்பவத்தைப் பற்றி நகைச்சுவையாக  பகிர்ந்து கொண்டார்.

  ‘எனக்குப் புரியவில்லை, எனது அறிமுகப் படத்தில் கதாநாயகியின் தொப்புளில் தேங்காய் வீசுவதாக ஒரு காட்சியமைப்பு இருந்தது. அந்தக் காட்சியின் மூலம் அதைக் காணும் ரசிகர்களுக்கு எப்படிச் சிலிர்ப்பு ஏற்படக் கூடும் என்று எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை’ என்று கூறி இருந்தார். உடனே டோலிவுட்டில் இதுவே பெரிய சர்ச்சையாக வெடித்தது. டாப்ஸி தன்னை அறிமுகப்படுத்திய ஒரு பிரபல இயக்குநரைப் பற்றி இப்படிப் பேசலாமா? தனக்கு வாழ்வளித்த இயக்குநரை டாப்ஸி அவமதித்து விட்டார் எனப் பலவாறாகப் பேசிப் பேசி ஓய்ந்தனர். 

  இதனால் மீண்டும் அப்செட்டான டாப்ஸி தற்போது தன்னிலை விளக்கமாக ஒரு வீடியோவை நெட்டில் உலவ விட்டிருக்கிறார். அதில்; ‘தான் யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்துவதற்காக அப்படிப் பேசவில்லை என்றும், தனது கருத்தைப் பற்றி இணையத்தில் வெளியாகி வரும் ட்வீட்டுகள் மற்றும் முகநூல் ஸ்ட்டஸ்களைக் காணும் போது தான் சொன்ன கருத்து மிக, மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தான் கருதுவதாகவும் கூறினார். திரையுலகில் கதாநாயகிகளை காட்சிப் படுத்தும் விதம் குறித்து நகைச்சுவையாக நான் தெரிவித்த விசயம் இப்படி முரணான வகையில் புரிந்து கொள்ளப்பட்டு வைரலாகப் பரவும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை... இதிலிருந்தே தெரிகிறது.. தான் இந்த சினிமாத்துறைக்கு எத்தனை பொருத்தமில்லாதவளாக இருக்கிறேன் என்பது. நான் எனது உணர்வுகளைத் தான் எள்ளலாக வெளிப்படுத்தினேன். அது பலரை காயப்படுத்தி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள் முடிகிறது. அதற்காக நான் நிஜமாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். எனது வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்களை மனம் நோகச் செய்யும் வழக்கம் எனக்கு கிடையாது. ராகவேந்திர ராவின் அறிமுகம் என்பதால் தான், நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன்... ஆனால் என் கருத்தின் மூலம் நான் அவரை அவமதித்து விட்டதாக எல்லோரும் பேசுவது என்னை வருத்தமடையச் செய்கிறது. அவரை அவமதிப்பது அல்ல என் நோக்கம். நான் சொன்ன கருத்து மிக, மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. நடந்தது நடந்து முடிந்து விட்டது. அதனால் நான் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் நிஜமாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவ்வளவு தான், நன்றி. என்று கூறி இருக்கிறார்.

  டாப்ஸியின் தன்னிலை விளக்க வீடியோ...

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai