கிளாஸாக எடுக்கப்பட்ட மாஸ் படம்: விக்ரம் வேதா குறித்து ரஜினி!

விக்ரம் வேதா படம் பார்த்த ரஜினி, அதன் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரிக்குத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்... 
கிளாஸாக எடுக்கப்பட்ட மாஸ் படம்: விக்ரம் வேதா குறித்து ரஜினி!

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது.

விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம் தமிழகமெங்கும் நல்ல வசூலைப் பெற்றுவருகிறது. 

இந்நிலையில் விக்ரம் வேதா படம் பார்த்த ரஜினி, அதன் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரிக்குத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புஷ்கர் - காயத்ரி ட்விட்டரில் கூறியதாவது:

கிளாஸாக எடுக்கப்பட்ட மாஸ் படம் என்று எங்களிடம் படம் குறித்து சூப்பர் ஸ்டார் கூறினார். என்ன ஒரு மனிதர்! நன்றி ரஜினி என்று ட்விட்டரில் கூறியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com