
ரஜினி அரசியலுக்கு நுழையக்கூடாது. அவர் நடிகராக மட்டுமே இருக்கவேண்டும் என்று நடிகர் கெளதம் கார்த்திக் கூறியதாக சமீபத்தில் செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கெளதம் கார்த்திக் எதிர்ப்பதாக பலரும் கெளதம் கார்த்திக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கெளதம் கார்த்திக் ட்விட்டரில் கூறியதாவது:
இவன் தந்திரன் பட நிகழ்ச்சிகாகத் திருச்சியில் இருந்தேன். ரஜினி சார் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்கிற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் சொன்னேன், ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார். நான் அவரை சூப்பர் ஸ்டாராக மட்டுமே பார்ப்பேன் என்றேன். இதுமட்டும்தான் நான் சொன்னது. ஆனால் நான் சொன்னது வேறு மாதிரியாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. தவறாக எழுதிவிட்டார்கள். என்னை அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கவேண்டாம். அரசியலுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் படத்தில் நடிக்கவே இங்கு வந்துள்ளேன். படம் பார்க்கவே விருப்பப்படுகிறேன். சூப்பர் ஸ்டாரின் படங்களைப் பார்க்க விருப்பப்படுகிறேன். அவ்வளவுதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.
கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இவன் தந்திரன் படம் ஜூன் 30 அன்று வெளிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.