ராம்ராஜ் காட்டன் ஆடைகளின் பிராண்ட் அம்பாஸிடரானார் ‘பாகுபலி’ ராணா!

இவர்கள் வரிசையில் இப்போது பாகுபலி புகழ் ராணா டகுபட்டி, நம்ம ஊர் ராம்ராஜ் காட்டன் பனியன் விளம்பரத்திற்கு பிராண்ட் அம்பாஸிடராகக் களமிறங்கியுள்ளார்.
ராம்ராஜ் காட்டன் ஆடைகளின் பிராண்ட் அம்பாஸிடரானார் ‘பாகுபலி’ ராணா!
Updated on
1 min read

சினிமாவை விட, தொலைக்காட்சி மெகாத் தொடர்களை விட மக்களிடம் மிகுந்த செல்வாக்கு கொண்டவை விளம்பரங்களே! அதனால் தான் அந்தக் காலத்திலிருந்து, இந்தக் காலம் வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என எந்த மொழி நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்கள் விளம்பரங்களில் நடிக்க ஆர்வமாகவே இருந்து வருகிறார்கள். இதில் ரஜினியும், கமலும் விதிவிலக்கு. இருவரும் அரசாங்க விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே நட்பின் பேரில் நடிப்பவர்களாயிருந்தார்கள். இருவரில் கமல் இப்போது தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு ‘போத்தீஸ்’ விளம்பரத்தில் தோன்றி வருகிறார். ரஜினியோ போலியோ விழிப்புணர்வு விளம்பரத்தில் மட்டுமே இதுவரை நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர அனேக ஹீரோக்களும் ஒன்றிற்கு மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து முடித்தவர்களே! விளம்பரங்களில் கிடைக்கும் வருமானம், திரைப்பட வருமானத்திற்கு நிகரில்லை என்றாலும், அதன் மூலம் கிடைக்கிற பாப்புலாரிட்டி சுதந்திரம் வேறு எதிலுமே கிடைத்து விடாது. அப்படி ஒரு நாளில் பற்பல சேனல்கள் வழியாக ஆயிரம் முறைகளாவது ஃபிளாஷ் ஆகக் கூடிய விளம்பரங்கள் பல உண்டு. 

உதாரணத்துக்கு;

  • நிர்மா...வாசிங் பெளடர் நிர்மா தொடங்கி (சங்கீதா பிஜ்லானி)
  • என் தங்கம்... என் உரிமை (பிரபு)
  • உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா?  (காஜல் அகர்வால்)
  • மனைவியை நேசிக்கிறவங்க பிரஸ்டீஜை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க! (ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஜோடி)
  • கோழிக்கறி, கோழிக்கறி குருமா ஆச்சி சிக்கன் மசாலா போல வருமா? (சத்யராஜ்) இத்யாதி...இத்யாதி விளம்பரங்கள்.

இதில் சக்திமசாலா, சரவணா ஸ்டோர்ஸ், நெஸ்கஃபே சன்ரைஸ், கம்ஃபோர்ட் ஃபேப்ரிக், ஃபேர்& லவ்லி என்று வகை தொகையில்லாமல் டஜன் கணக்கில் ஒரே சமயத்தில் பலவிதமான விளம்பரங்களில் நடித்துப் பட்டையைக் கிளப்பிய பெருமை சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு உண்டு.

சரி விஷயத்துக்கு வருகிறேன்... இவர்கள் வரிசையில் இப்போது பாகுபலி புகழ் ராணா டகுபட்டி, நம்ம ஊர் ராம்ராஜ் காட்டன் பனியன் விளம்பரத்திற்கு பிராண்ட் அம்பாஸிடராகக் களமிறங்கியுள்ளார். முன்னதாக தெலுங்கில் ராணாவின் சித்தப்பாவும், நடிகருமான வெங்கடேஷ் ராம்ராஜ் காட்டன் வேஷ்டி விளம்பரத்தில் நடித்து அந்த விளம்பரம் அங்கு பாப்புலரானதில் இப்போது ராணாவும் அதே விளம்பரத்தில் யூத் ஐகானாகக் களமிறக்கப் பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com